For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பன்ட் கொஞ்சம் சொதப்பல்... அதனால அவரு வேண்டாம்.. தினேஷ் கார்த்திக்கை டிக் பண்ணினோம்

மும்பை: ரிஷப் பன்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அந்த தொடருக்கான அணியை முதல் நாடாக நியூசிலாந்து அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவும் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்தது. அதில் வார்னரும், ஸ்மித்தும் இடம்பிடித்தனர்.

தற்போது இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய 2 தமிழர்கள் உள்பட 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

4ம் வரிசைக்கு தீர்வு

4ம் வரிசைக்கு தீர்வு

இந்திய அணியின் சிக்கலாக பார்க்கப்பட்ட 4ம் வரிசைக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சொதப்பியதால் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டிருக்கிறார்.

ரிஷப் பன்ட் இல்லை

ரிஷப் பன்ட் இல்லை

20 ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் ரிஷப் பன்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், ரிஷப் பன்ட்டை தள்ளி வைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர்.

தேர்வுக்குழு விளக்கம்

தேர்வுக்குழு விளக்கம்

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

அனுபவம் வாய்ந்தவர்

அனுபவம் வாய்ந்தவர்

கடைசியில் ரிஷப் பன்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்தவர்... நல்ல விக்கெட் கீப்பர் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார்.

விக்கெட் கீப்பிங் முக்கியம்

விக்கெட் கீப்பிங் முக்கியம்

அப்படியிருக்க கூடிய நேரத்தில் உலக கோப்பை என்பது முக்கியமான தொடர். எனவே... விக்கெட் கீப்பர் சிறப்பாக செயல்பட வேண்டும். அந்த ஒரு காரணத்திற்காக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Story first published: Monday, April 15, 2019, 23:07 [IST]
Other articles published on Apr 15, 2019
English summary
Dinesh karthik is an experience player, so we took him in indan squad says bcci MSK Prasad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X