For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் மீது யாரும் நம்பிக்கை வைக்கல.. முயற்சியை மட்டும் நான் விடல.. தினேஷ் கார்த்திக் உருக்கம்

கொல்கத்தா: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வுக்குழுவினர் இந்திய அணியில் சேர்த்தனர்.

Recommended Video

IND vs SA தொடரில் Dinesh Karthik விளையாடுவதில் சிக்கல் | #Cricket

இது குறித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்டு இருந்த கார்த்திக், உங்களை நீங்கள் நம்பினால், அனைத்து விஷயங்களும் சரியான நேரத்தில் நடக்கும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், ஆர்சிபி இணையத்தளத்துக்கு தினேஷ் கார்த்திக் உருக்கமான பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தினேஷ் கார்த்திக் ப்ளேயிங் 11ல் இருக்க மாட்டார்.. தென்னாப்பிரிக்க தொடரில் ஏமாற்றம்.. ஏன் தெரியுமா? தினேஷ் கார்த்திக் ப்ளேயிங் 11ல் இருக்க மாட்டார்.. தென்னாப்பிரிக்க தொடரில் ஏமாற்றம்.. ஏன் தெரியுமா?

சிறந்த கம்பேக்

சிறந்த கம்பேக்

இது தான் என்னுடைய சிறந்த கம்பேக் என நினைக்கிறேன். என் மீது பலரும் நம்பிக்கையை இழந்தனர். (கொல்கத்தா அணி, தமிழக ரஞ்சி அணி, இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததை கார்த்திக் குறிப்பிடுகிறார்) ஆனால் நான் என் பயிற்சியை மட்டும் விடவில்லை. தொடர்ந்து பேட்டிங்கில் பயிற்சி மேற்கொண்டேன். அதற்கான நல்ல பலன் தற்போது கிடைத்துள்ளது.

ஆர்சிபிக்கு நன்றி

ஆர்சிபிக்கு நன்றி

ஆர்சிபி என்னை தேர்வு செய்து வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி. அவர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று முன்பே கூறிவிட்டனர். இதனால் எனக்கு மனதளவில் ஒரு தெளிவு கிடைத்தது. அதைவைத்து நான் சிறப்பு பயிற்சி மேற்கொண்டேன். என்னால் அணியின் வெற்றிக்கு உதவ முடிகிறது என்பது குறித்து மகிழ்ச்சி.

கார்த்திக் குறிக்கோள்

கார்த்திக் குறிக்கோள்

நிறைய இளைஞர்கள் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தி, அணிக்காக போட்டியிடும் போது, தேர்வுக்குழுவினர், இந்த திறமையை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்து தேர்வு செய்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னுடைய முக்கிய குறிக்கோளே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பையில் விளையாடுவது தான்.

வாய்ப்புக்கு நன்றி

வாய்ப்புக்கு நன்றி

எனக்கு தெரியும் இன்னும் உலககோப்பைக்கான பயணம் இருக்கிறது என்று.. அதற்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு என் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த வாய்ப்பு கிடைத்தற்கு பெருமைப்படுகிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். இதனிடையே, கார்த்திக் வர்ணனையாளராக இருந்த போது, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை 2004-2020 என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த புகைப்படத்தை எடுத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Tuesday, May 24, 2022, 18:30 [IST]
Other articles published on May 24, 2022
English summary
Dinesh Karthik reveals many people given up on him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X