For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன வேலை பார்க்கனும்னே தெரியலையே.. அலுத்துக் கொள்ளும் கங்குலி!

கொல்கத்தா: பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சேர்த்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் என்ன வேலை செய்யப் போகிறோம் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் கங்குலி, சச்சின், லக்ஷ்மன் ஆகிய மும்மூர்த்திகளை சேர்த்துள்ளனர். இக்குழுவில் இணைய தனிப்பட்ட சில காரணங்களால் டிராவிட் மறுத்து விட்டதால், அவருக்குப் பதில் லக்ஷ்மனை சேர்த்துள்ளனராம்.

Don't know what is my role in BCCI's advisory panel, says Sourav Ganguly

இந்த நிலையில் தனது நியமனம் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியே. ஆனால் எனது பங்கு என்ன என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.

இப்போதுதான் எனக்கு நியமனம் குறித்த செய்தி வந்து சேர்ந்தது. ஆனால் என்ன வேலை என்பது சரியாக தெரியவில்லை. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.

வங்கதேசம் செல்லும் இந்திய அணியில் நானும் உடன் செல்வேனா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுகுறித்து எந்த ஐடியாவும் என்னிடம் இல்லை என்றார் கங்குலி.

Story first published: Tuesday, June 2, 2015, 11:02 [IST]
Other articles published on Jun 2, 2015
English summary
Former India captain Sourav Ganguly said he was clueless about what his role would be in the newly-formed BCCI's Advisory Committee.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X