டிராவிடத்திடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி.. வைரல் ஆன வால் ஆப் இந்தியா!

Posted By:

சென்னை: இந்திய ஜூனியர் அணி நேற்று நிகழ்த்திய சாதனைதான் இன்னும் 5 வருடங்களுக்கு பிறகான இந்திய ஏ அணியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிறது. கிட்டத்தட்ட ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'சக் தே இந்தியா' படம் போலவே இந்திய அணி நேற்று கோப்பை வென்று இருக்கிறது.

சத்தமில்லாமல் அமைதியாக ராகுல் டிராவிட் கோப்பையை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்திய வீரர்களே 150 கிமீ வேகத்தில் பந்து வீசாத போது ஜூனியர்களை அந்த மைல்கல்லை எட்ட வைத்துள்ளார்.

சுப்மான் கில், நாகர்கோட்டி என பல முத்துக்கள் இந்திய அணிக்கு இதன் மூலம் கிடைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளம் ராகுலை தூக்கிவைத்து கொண்டாடி இருக்கிறது.

கோப்பை கொடுத்த நிமிடம்

இந்த போட்டி முடிந்து கொண்டாட்டம் முடியும் வரை ராகுல் வெளியே வரவே இல்லை. மிகவும் தாமதமாகத்தான் இவர் வெளியே வந்தார். அப்போது இந்திய வீரர்கள் அவருக்கு கோப்பை கொடுத்து கொண்டாடினார்கள்.

அதே மாதிரி

இவர் ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிலும் பயிற்சியாளராக ஷாருக்கான் இப்படித்தான் இந்திய ஹாக்கி அணிக்கு கோப்பை வாங்கி கொடுப்பார்.

டிராவிட் அதிர்ஷ்டம்

இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் தொடர் நாயகன் விருது வாங்கினார். அவர் பேட்டியில் ''ராகுல் டிராவிட் அணிக்கு பயிற்சியாளராக கிடைத்தது பெரிய வரம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

குழந்தை சார்

இவர் ''U19 பாய்ஸ் கப் ஓட டிராவிட் நோக்கி ஓடி போறது வெற்றி பெற்ற குழந்தை தன் தாயை தேடி ஓடுவது போல உள்ளது'' என்றுள்ளார்.

அவர்தான் எப்பவும்

இவர் ''சில பேருக்கு சச்சின்.....சில பேருக்கு சேவாக்...சில பேருக்கு விராட் ....ஆனால் எல்லாருக்கும் எப்பவும் பிடிச்ச பிளேயர்னா.. ஒன் அன்ட் ஒன்லி #ராகுல்_டிராவிட் தான்'' என்றுள்ளார்.

அதுக்குத்தான் பெருமை

இவர் ''ராகுல் டிராவிட் கையில் பட்டு தன்னை பெருமைபடுத்தி கொண்டது உலகக்கோப்பை''என்றுள்ளார்.

இந்தியாவின் எதிர்காலம்

இவர் ''டிராவிட் இந்திய ஜூனியர் அணியை மட்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரவில்லை. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, February 4, 2018, 12:06 [IST]
Other articles published on Feb 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற