எதிரியின் பாராட்டை வென்றார் டிராவிட்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று தந்ததில் மிகப் பெரிய பங்கு கோச் ராகுல் டிராவிடுக்கு உள்ளது. அவர் பெருந்தன்மையுடன், அந்த புகழ்ச்சிகளை சிரிப்புடன் ஒதுக்கு தள்ளி வருகிறார். ஆனால், எதிரியிடமிருந்து வாழ்த்து என்பது டிராவிடுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பாராட்டு.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இது நமது இளம் வீரர்களின் திறமை, அவர்களுடைய அர்ப்பணிப்பு அனைத்துமே காரணம். அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரருக்கும் அந்தப் பெரும் சேரும்.

அதே நேரத்தில் இந்த இளம் அணியை, சாம்பியன் கோப்பையை வெல்லும் அணியாக மாற்றியதில், அணியின் கோச், இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் பங்கு மிகப் பெரியது. இதை உணர்ந்துதான், அணியினர் மட்டுமல்ல, நாடே, ஏன், கிரிக்கெட் உலகமே அவரைக் கொண்டாடி வருகிறது.

பாகிஸ்தான் பாராட்டு

பாகிஸ்தான் பாராட்டு

இதையெல்லாம்விட, விளையாட்டில் எதிரி அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரின் பாராட்டு டிராவிடுக்கு குவிந்து வருகிறது. ரமீஸ் ராஜா முதல், அப்ரிதி வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள், இன்னாள் வீரர்கள் டிராவிடை பாராட்டுகின்றனர்.

பாகிஸ்தான் புகார்

பாகிஸ்தான் புகார்

உலகக் கோப்பை அரை இறுதியில், இந்திய அணி பாகிஸ்தான் சந்தித்தது. 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இது ஏதே மந்திரம் செய்ததுபோல் இருக்கிறது என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜரான முன்னாள் வீரர் நதீம் கான் கூறினார்.

டிராவிட் டிராவிட்தான்

டிராவிட் டிராவிட்தான்

அதே நேரத்தில், டிராவிடின் பெருந்தன்மை குறித்து நதீம் கான் கூறியதுதான் ஹைலைட். "செமி பைனல்ஸ் முடிந்தது. நாங்கள் தோல்வியடைந்தோம். அந்த நேரத்தில், வீரர்கள் அறைக்கு வந்த இந்திய அணியின் கோச் டிராவிட், நமது வீரர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார். இதுபோன்ற ஒரு மனிதரை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. வெற்றி தோல்விகளைத் தாண்டி, இளம் வீரர்களை ஊக்குவிக்கும் அவருடைய குணம் அவருக்கு மட்டுமே வரும்" என்று நதீம் கான் கூறியுள்ளார்.

மீண்டும் நிரூபித்தார் டிராவிட்

மீண்டும் நிரூபித்தார் டிராவிட்

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டத்தை விசுவாமித்திரர் பெற்றதெல்லாம் வரலாறு. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பதை டிராவி்ட் மீண்டும் நிரூபித்துள்ளார்.

Story first published: Tuesday, February 6, 2018, 10:11 [IST]
Other articles published on Feb 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற