For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த அணி வீரரை களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே.. மேட்ச் நடக்கும் போதே அதிரடி.. என்ன நடந்தது?

கோவை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை மேற்கு மண்டல அணி கைப்பற்றியது.

கோயமுத்தூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டல அணியும் மேற்கு மண்டல அணியும் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கேப்டன் ரஹானே , தனது சொந்த அணி வீரரையே களத்தை விட்டு வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள் உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள்

270 ரன்கள்

270 ரன்கள்

மேற்கு மண்டல அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 1 ரன்னிலும், பிரியாங் பஞ்சால் 7 ரன்களிலும், கேப்டன் ரகானே 8 ரன்களிலும் ஆட்டம் இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்கள் சேர்த்தார். சர்பிராஸ் கான் 34 ரன்கள் எடுக்க, ஹேட் பட்டேல் 98 ரன்கள் குவித்தார். இறுதியில் ஜெய்தேவ் உநாட்கட் 47 ரன்கள் விலாச மேற்கு மண்டல அணி 270 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

பாபா இந்தரஜித் சதம்

பாபா இந்தரஜித் சதம்

தெற்கு மண்டல அணி பந்து வீச்சில் தமிழக வீரர் சாய் கிஷோர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு மண்டல் அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் 118 ரன்கள் எடுத்தார். கேப்டன் விகாரி 25 ரன்கள் மட்டுமே எடுக்க மனிஷ் பாண்டே 48 ரன்கள் எடுத்தார். இதனால் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் குவித்தது.

இரட்டை சதம்

இரட்டை சதம்

இதனை அடுத்து 57 ரன்கள் பின் தங்கிய நிலையில் மேற்கு மண்டல அணி தனது இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறிய ஜெய்ஷ்வால் 265 ரன்கள் குவித்தார். சர்பிராஸ் கான் 127 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 71 ரன்களும் எடுக்க மேற்கு மண்டல அணி 585 ரன்கள் குவித்தது.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

இதனை அடுத்து 529 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தெற்கு மண்டல அணியில் தொடக்க ரோகன் 93 ரன்கள் அதிகபட்சமாக அடிக்க, ரவி தேஜா அரை சதம் அடித்தார். இதனால் தெற்கு மண் அணி 234 ரன்கள் ஆட்டமிழந்தது. இதன் மூலம் மேற்கு மண்டல் அணி துலீப் கோப்பையை வென்றது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 57வது ஓவரில் ஒரு பெரிய சம்பவம் நடைபெற்றது.

வெளியே அனுப்பிய ரஹானே

வெளியே அனுப்பிய ரஹானே

தெற்கு மண்டலம் ரவி தேஜா பேட்டிங் செய்யும்போது பில்டிங் செய்து கொண்டிருந்த ஜெயஸ்வால் அவரை வசைப்பாடி கொண்டு இருந்தார். இதனால் கடுப்பான ரவிதேஜா கேப்டன் ரகானை விடும் புகார் அளித்தார். இதனை அடுத்து ஜெய்ஸ்வாலை கண்டித்த ரஹானே அவரை களத்தில் இருந்து வெளியே அனுப்பினார். இதனால் களத்தில் வெறும் பத்து வீரர்களை மட்டுமே கொண்டு மேற்கு மண்டல அணி விளையாடியது.

Story first published: Sunday, September 25, 2022, 18:42 [IST]
Other articles published on Sep 25, 2022
English summary
Duleep Trophy 2022 - Rahane sent off Jaiswal over indiscipline action
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X