சோதனை மேல் சோதனை... பிராவோ இன்னும் சில வாரங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார்

ஷார்ஜா : நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையிலான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததற்கு இறுதி ஓவரில் பிராவோ பௌலிங் போடாதது முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, போட்டியின் இடையில் பிராவோவிற்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அடுத்த சில வாரங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார் என்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

தேவை இல்லாத ரிஸ்க்.. ஏன் இப்படி? வார்னர் எடுத்த ஷாக் முடிவு.. பதறிய ரசிகர்கள்!

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

நேற்றைய ஐபிஎல்லின் 34வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு 180 என்ற சிறப்பான இலக்கை அளித்த நிலையிலும் சிஎஸ்கே தோல்வியை அடைந்துள்ளது.

பிராவோ இடுப்பில் காயம்

பிராவோ இடுப்பில் காயம்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவானின் அபார ஆட்டம், பிராவோ இறுதி ஓவரில் பௌலிங் போடாதது உள்ளிட்ட காரணங்கள் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அணியின் டூ பிளசிஸ், வாட்சன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக விளையாடிய நிலையிலும் அவர்களின் முயற்சி வீணாக மாறியது.

அணியில் இடம்பெற மாட்டார்

அணியில் இடம்பெற மாட்டார்

இந்நிலையில், இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்த சில வாரங்களுக்கு பிராவோ அணியில் இடம்பெற மாட்டார் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். போட்டியின் இடையில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், நடுவில் போட்டியில் இருந்து வெளியேறிய பிராவோ, மீண்டும் திரும்பவில்லை.

அணிக்கு அதிகரித்துள்ள சவால்

அணிக்கு அதிகரித்துள்ள சவால்

இதனிடையே, தன்னால் இறுதி ஓவரை போட முடியவில்லை என்று பிராவோ வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் பிளமிங் தெரிவித்துள்ளார். அவருக்கு சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ காயம் குணமாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பிராவோ அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அணிக்கு மேலும் சவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Unfortunately Dwayne Bravo got injured so he could not bowl the last over -Fleming
Story first published: Sunday, October 18, 2020, 17:14 [IST]
Other articles published on Oct 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X