For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ENG vs IRE 2nd ODI : அயர்லாந்து டாஸ் வெற்றி.. 4 ஆண்டுகள் கழித்து வாய்ப்பு பெற்ற இங்கிலாந்து வீரர்!

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

IPL 2020 : UAE planning to allow fans inside stadium

அயர்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளும் தலா ஒரு மாற்றம் செய்துள்ளன.

இங்கிலாந்து அணியில் நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு வீரர் வாய்ப்பு பெற்றுள்ளார்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி, முதல் போட்டி நடந்த அதே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அயர்லாந்து டாஸ் முடிவு

அயர்லாந்து டாஸ் முடிவு

முதல் போட்டியில் அயர்லாந்து முதலில் பேட்டிங் ஆடி தோல்வி அடைந்து இருந்த நிலையில், அதே மைதானத்தில் நடக்கும் போட்டி என்றாலும், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

மாற்றம்

மாற்றம்

பேரி மெக்கார்தி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜோஷுவா லிட்டில் அயர்லாந்து அணியில் இடம் பெற்றார். இங்கிலாந்து அணியில் டாம் கர்ரன் நீக்கப்பட்டு, ரீஸ் டாப்லி அணியில் இடம் பெற்றார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

போட்டி நிலை

போட்டி நிலை

இந்தப் போட்டியில் வென்றால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றும். அதே சமயம், அயர்லாந்து அணி அத்தனை எளிதில் வெற்றியை பறி கொடுக்காது என்பதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்ஸ், டாம் பான்டன், இயான் மார்கன் (கேப்டன்), சாம் பில்லிங்க்ஸ், மொயீன் அலி, டேவிட் வில்லி, அதில் ரஷீத், ரீஸ் டாப்லி, சகிப் மஹ்மூத்

அயர்லாந்து அணி

அயர்லாந்து அணி

இரண்டாவது போட்டியில் களமிறங்கிய அயர்லாந்து அணி - பால் ஸ்டிர்லிங், கேரத் டெலானி, ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), ஹேரி டெக்டர், கெவின் ஓ பிரையன், லோர்கன் டக்கர், கர்ட்டிஸ் கேம்பர், சிமி சிங், ஆன்டி மெக்பிரின், ஜோஷுவா லிட்டில், கிரைக் யங்

Story first published: Saturday, August 1, 2020, 18:58 [IST]
Other articles published on Aug 1, 2020
English summary
ENG vs IRE : England vs Ireland 2nd ODI - Ireland won toss and elected to bat. Both the team did one change each.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X