செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இங்கிலாந்து அணி வெற்றிக்கு 160 ரன்கள் தேவை எனும் நிலையில் 5 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது, எனினும், பட்லர் - கிறிஸ் வோக்ஸ் ஜோடியின் அதிரடி பேட்டிங்கால் அந்த அணி வெற்றி பெற்றது.

செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 326 ரன்கள் எடுத்தது. ஷான் மசூத் 156 ரன்கள் குவித்தார். பாபர் ஆசாம் 69, ஷதாப் கான் 45 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 219 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெற்றி இலக்கு

வெற்றி இலக்கு

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றது. எனினும், இரண்டாவது இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது அந்த அணி.

இங்கிலாந்து ஆட்டம்

இங்கிலாந்து ஆட்டம்

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடினால் வெற்றி பெறும் என கருதப்பட்டது. எனினும், துவக்க வீரர் பர்ன்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் டொமினிக் ஸிப்லி 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஜோ ரூட் ஏமாற்றம்

ஜோ ரூட் ஏமாற்றம்

கேப்டன் ஜோ ரூட் கடந்த சில போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்காத நிலையில் இந்தப் போட்டியில் அணியை கரை சேர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவரும் 42 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர்.

கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்

கைவிட்ட பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த ஓல்லி போப் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. வெற்றிக்கு 160 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

பட்லர் - வோக்ஸ் ஜோடி

பட்லர் - வோக்ஸ் ஜோடி

பாகிஸ்தான் அணி வெற்றி உறுதி என்றே பலரும் கருதிய நிலையில், பட்லர் - வோக்ஸ் ஜோடி விக்கெட் வீழ்ச்சியை சிறிதும் பொருட்படுத்தாமல் அதிரடி ஆட்டம் ஆடியது. அவர்கள் ரன் குவித்த வேகத்தால் இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்தது இங்கிலாந்து.

பாகிஸ்தான் அணி மீது அழுத்தம்

பாகிஸ்தான் அணி மீது அழுத்தம்

அதனால், பாகிஸ்தான் அணி மீது அழுத்தம் அதிகரித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியது பாகிஸ்தான். இங்கிலாந்து 256 ரன்களை எட்டிய நிலையில் பட்லர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பிராடு 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

எனினும், கிறிஸ் வோக்ஸ் கடைசி வரை களத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 82.1 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியின் பெரும்பாலான நேரம் ஆதிக்கம் செலுத்தியது. எனினும், பட்லர் - வோக்ஸ் ஜோடியை விரைவாக வீழ்த்தாத ஒரே காரணத்தால் வெல்ல வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது.

சாதனை வெற்றி

சாதனை வெற்றி

இந்த ரன் சேஸிங் வெற்றி இங்கிலாந்து அணியின் பத்தாவது சிறந்த சேஸிங் வெற்றி ஆகும். கிறிஸ் வோக்ஸ் நீண்ட காலமாக பேட்டிங்கில் பெரிதாக ரன் எடுக்காத நிலையில், இந்தப் போட்டியில் பந்துவீச்சில் 4 விக்கெட்கள், பேட்டிங்கில் 84* ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ENG vs PAK : England vs Pakistan 1st test match result update. Pakistan set a target of 277 to England.
Story first published: Saturday, August 8, 2020, 20:26 [IST]
Other articles published on Aug 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X