For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்து.. 1 சிக்ஸ் தேவை.. திக்திக் டி20.. போராடிய இங்கிலாந்து.. செம ஆட்டம் ஆடிய பாக்.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.

Recommended Video

CSK வீரர்களுக்கு September 4 முதல் பயிற்சி - CEO அறிவிப்பு

இங்கிலாந்து அணி போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் இரண்டாம் டி20 போலவே சிறப்பாக செயல்பட்டது.

பந்துவீச்சில் சரியான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

இந்தியா -பாகிஸ்தான் மேட்ச்க்கு இப்ப வாய்ப்பே இல்லை... பயங்கரமான சூழ்நிலை நிலவிக்கிட்டு இருக்கு இந்தியா -பாகிஸ்தான் மேட்ச்க்கு இப்ப வாய்ப்பே இல்லை... பயங்கரமான சூழ்நிலை நிலவிக்கிட்டு இருக்கு

டி20 தொடர்

டி20 தொடர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடின. முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாம் டி20யில் இங்கிலாந்து அணி அபார ஆட்டம் ஆடி 196 ரன்களை சேஸ் செய்தது.

மூன்றாவது டி20

மூன்றாவது டி20

அடுத்து மூன்றாவது டி20யில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு பாக்கர் ஜமான் 1, பாபர் ஆசாம் 21 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் அளித்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த ஹைதர் அலி - முகமது ஹபீஸ் அதிரடி ஆட்டம் ஆடினர்.

ஹைதர் அலி அரைசதம்

ஹைதர் அலி அரைசதம்

ஹைதர் அலி 33 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அவர் 5 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் ஆட்டமிழந்த பின் ஷதாப் கான் 15, இமாத் வாசிம் 6* ஆகியோருடன் சேர்ந்து ஹபீஸ் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

ஹபீஸ் அதிரடி

ஹபீஸ் அதிரடி

ஹபீஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 86 ரன்கள் குவித்து இருந்தார். 4 ஃபோர், 6 சிக்ஸ் என இரண்டாவது போட்டி போலவே இந்தப் போட்டியிலும் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்து அசத்தினார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மொயீன் அலி 1, ஜோர்டான் 2, டாம் கர்ரன் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அதில் ரஷித் 3 ஓவர்களில் 40 ரன்களும், கிரிகோரி 4 ஓவர்களில் 41 ரன்களும் கொடுத்து சொதப்பி இருந்தனர்.

இங்கிலாந்து வெல்லும் என்ற எதிர்பார்ப்பு

இங்கிலாந்து வெல்லும் என்ற எதிர்பார்ப்பு

191 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி சேஸிங் செய்யத் துவங்கிய போது இரண்டாவது போட்டி போலவே எளிதாக வெல்லும் என்றே அனைவரும் கணித்தனர். துவக்க வீரர் பேர்ஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றினார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

அவரைத் தொடர்ந்து மலன் 7, இயான் மார்கன் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர் டாம் பான்டன் 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். பார்ம் அவுட்டில் இருந்த மொயீன் அலி வெறியாட்டம் ஆடினார். மறுபுறம் சாம் பில்லிங்க்ஸ் 26, கிரிகோரி 12, ஜோர்டான் 1 ரன்னில் வரிசையாக வெளியேறினர்.

விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான்

விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான்

இங்கிலாந்து அணி கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது பாகிஸ்தான் அணி 18வது ஓவரில் 1 விக்கெட், 19வது ஓவரில் மொயீன் அலி உட்பட 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

மொயீன் அலி 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது களத்தில் டாம் கர்ரன், அதில் ரஷித் இருந்தனர். இருவரும் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தனர்.

2 பந்துகளில் 2 சிக்ஸ்

2 பந்துகளில் 2 சிக்ஸ்

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸ் அடித்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலையில், டாம் கர்ரன் 5வது பந்தில் சிக்ஸ் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும், கடைசி பந்தை அவரால் தொட முடியவில்லை. பாகிஸ்தான் அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்று டி20 தொடரை 1 - 1 என சமன் செய்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சு

பாகிஸ்தான் பந்துவீச்சு

பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 4 ஓவரில் 48 ரன்கள் கொடுத்து ஏமாற்றினாலும், வஹாப் ரியாஸ் 2, ஷஹீன் ஷா அப்ரிடி 2, இமாத் வாசிம் 1, ஹாரிஸ் ராப் 1 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியை வீழ்த்த காரணமாக இருந்தனர். அதிரடியாக ஆடி 86 ரன்கள் குவித்த ஹபீஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Story first published: Wednesday, September 2, 2020, 19:40 [IST]
Other articles published on Sep 2, 2020
English summary
ENG vs PAK : England vs Pakistan 3rd T20 match report - Pakistan won the match by 5 runs. England lost wickets in 18th and 19th over in the chase which cost the match for them.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X