For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தை துவம்சம் செய்த நியூசிலாந்து படை.. பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்திய ஸ்டோக்ஸ் படை

லீட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி வென்ற நிலையில், சமிபிரதாய ஆட்டமாக இது நடைபெற்றது.

“ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்! “ஒரு வெற்றி கூட இல்லை“ .. ராகுல் டிராவிட்-க்கு வந்த சோதனை.. இந்தியாவுக்கு இன்னும் 3 வாய்ப்பு தான்!

இதனையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டாம் லத்தம் டக் அவுட்டாகினார்.

நியூசி 329 ஆட்டமிழப்பு

நியூசி 329 ஆட்டமிழப்பு

வில் யங் 20 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 31 ரன்களும் எடுத்தனர். கான்வே 26 ரன்கள்.ஹேன்ரி நிக்கோலஸ் 19 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனையடுத்து சரிவிலிருந்த நியூசிலாந்து அணியை டேரல் மிட்செல் சதம் விளாசினார். டாம் பிளான்டல் தன் பங்கிற்கு 55 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஸ்டம்புகள் சிதறின

ஸ்டம்புகள் சிதறின

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் டிரெண்ட் பவுல்ட், தனது அனல் பறக்கும் பந்துவீச்சை வீச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதனை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார். அலக்ஸ் லீக், ஷாக் கிராலி மற்றும் போப் ஆகியோர் பவுல்ட் பந்துவீச்சில் ஸ்டம்ப் சிதற ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து 55/6

இங்கிலாந்து 55/6

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், 5 ரன்களில் சௌதி பந்துவீச்சில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 18 ரன்கள் குவித்த நிலையில், அவரும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்தது. இதில் 12வது ஓவரில் வாக்னர் வீசிய போது 2 விக்கெட்டுகள் இழந்தது.

பாரிஸ்டோ அரைசதம்

பாரிஸ்டோ அரைசதம்

இதனையடுத்து, தடுமாறிய இங்கிலாந்து அணியை பாரிஸ்டோ தனி ஆளாக நின்று அரைசதம் விளாசினார். தற்போது, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதல் வெற்றியை பெறுவதற்காக நியூசிலாந்து அணியும், ஹாட்ரிக் வெற்றி பெற இங்கிலாந்தும் போராடி வருகிறது.

Story first published: Friday, June 24, 2022, 21:44 [IST]
Other articles published on Jun 24, 2022
English summary
England batsman struggling to face NZ bowling இங்கிலாந்தை துவம்சம் செய்த நியூசிலாந்து படை.. பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்திய ஸ்டோக்ஸ் படை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X