For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து 3வது போட்டியிலும் சதம்.. பாகிஸ்தானுக்கு வில்லனான ஹாரி புரூக்ஸ்.. இங்கிலாந்து பதிலடி!

கராச்சி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக்ஸ்-ன் அபார சதத்தால், இங்கிலாந்து அணி 50 ரன்கள் முன்னிலை பெற்றது.

17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. பாகிஸ்தானை வொயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. மறுபக்கம் மூத்த வீரர் அசார் அலியை வெற்றியுடன் வழியனுப்பவும், ஆறுதல் வெற்றியை பெறவும் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

 பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மாற்றம்.. ரமீஸ் ராஜாவுக்கு ஆப்பு.. புதிய தலைவர் யார் தெரியுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மாற்றம்.. ரமீஸ் ராஜாவுக்கு ஆப்பு.. புதிய தலைவர் யார் தெரியுமா?

பாகிஸ்தான் 304 ரன்கள் குவிப்பு

பாகிஸ்தான் 304 ரன்கள் குவிப்பு

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும் சல்மான் ஆகியோரின் அரைசதம் காரணமாக 304 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும், ரெஹான் மஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் கிரேலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது.

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

அதில் தொடக்கத்திலேயே போப் அதிரடியாக ஆட, மறுபக்கம் டக்கெட் 26 ரன்களிலும், ரூட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து போப் அரைசதம் விளாசி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்டோக்ஸ் - ஹாரி புரூக்ஸ் இணை பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.

சதம் விளாசிய புரூக்ஸ்

சதம் விளாசிய புரூக்ஸ்

குறிப்பாக புரூக்ஸ் பாகிஸ்தான் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் சிதறடித்தார். பின்னர் ஸ்டோக்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பென் ஃபோக்ஸ் களமிறங்கி அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக்ஸ் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் பென் ஃபோக்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணியின் வேகமாக உயர்ந்தது.

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து முன்னிலை

பின்னர் புரூக்ஸ் 111 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வுட் 35 ரன்களிலும், ஃபோக்ஸ் 64 ரன்களிலும், ராபின்சன் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழ்ந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 354 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 50 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் நாள் இறுதியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

விராட் கோலி - புரூக்ஸ்

விராட் கோலி - புரூக்ஸ்

இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் ஹாரி புரூக்ஸ் விராட் கோலியை போல் அனைத்து ஃபார்மட்டுக்கான வீரர் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். அதற்கேற்ப புரூக்ஸ் ஆசிய மைதானத்தில் அடுத்தடுத்து மூன்று சதங்களை விளாசியுள்ளது அவர் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

Story first published: Sunday, December 18, 2022, 19:48 [IST]
Other articles published on Dec 18, 2022
English summary
England took a 50-run lead in the 3rd Test against Pakistan with Harry Brooks' brilliant century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X