For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப் பரிதாபமே.. டி 20 போட்டியும் போச்சா.. வெறும் கையுடன் தாயகம் திரும்பும் ஆஸி!

By Aravinthan R

எட்பாஸ்டன்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு இடையே நேற்று எட்பாஸ்டன் (Edgbaston) - இல் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஒரு நாள் தொடரை மொத்தமாக 5-0 என்ற நிலையில் இழந்த ஆஸ்திரேலியா, மீதமிருந்த ஒரே டி20 போட்டியிலும் தோற்று, வெறுங்கையுடன் ஊர் திரும்புகிறது.

இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் அரைசதம் அடித்து, டி20யில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர், ஆரம்பம் முதலே அதிரடியாக பௌண்டரிகள் அடிக்கத் தொடங்கினர். முதல் 6 ஓவர்களில் 70 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தனர். ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 44, மோர்கன் 15 ரன்களில் வெளியேற, அலெக்ஸ் ஹேல்ஸ், அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 24 பந்துகளில், 49 ரன்கள் எடுத்தார் ஹேல்ஸ். இறுதி ஓவர்களில், ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ ரன் சேர்க்க, இங்கிலாந்து 221 ரன்கள் குவித்தது.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

பில்லி ஸ்டான்லேக் 3 ஓவர்கள் வீசி 44 ரன்கள் (ரன் ரேட் - 14.67) கொடுத்தார். கேன் ரிச்சர்ட்சன் 4 ஓவர்கள் வீசி 59 ரன்கள் (ரன் ரேட் - 14.75) கொடுத்தார். மற்றவர்கள் ஓவருக்கு பத்து ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்தனர்.

தனி ஒருவன் பின்ச்

தனி ஒருவன் பின்ச்

கேப்டனான ஆரரோன் பின்ச், தனி ஒருவனாக இங்கிலாந்து நிர்ணயித்த இமாலய இலக்கை எதிர்த்து போராடினார். 8.4 ஓவர்களில் 72 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த ஆஸ்திரேலியா அணியின், பின்ச் மட்டும் 41 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பதினாறாவது ஓவரில் வெளியேறினார். பின்ச் தவிர மற்ற பேட்ஸ்மன்கள் சொதப்ப, ஆஸ்திரேலியா 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அள்ளிக் கொடுத்த மொயின் அலி

அள்ளிக் கொடுத்த மொயின் அலி

கேன் ரிச்சர்ட்சனுக்கு போட்டியாக பந்து வீசிய இங்கிலாந்தின் மொயின் அலி, 4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தார். அதில் ரஷித் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

ஆஸ்திரேலியா அணியில் மாற்றங்கள்?

ஆஸ்திரேலியா அணியில் மாற்றங்கள்?

படு மோசமான தோல்வியோடு ஊர் திரும்பும் ஆஸ்திரேலியா அணியில், சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. முக்கியமாக, ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து டிம் பைன் மாற்றப்பட்டு, ஆரோன் பின்ச் நியமிக்கப்படுவார் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன

Story first published: Thursday, June 28, 2018, 15:39 [IST]
Other articles published on Jun 28, 2018
English summary
England won the only T20 against Australia. Jos Buttler guided the team to reach a massive score of 221.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X