For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அன்னிக்கு ரவி சாஸ்திரி பண்ணினாரு…! இன்னிக்கு இவர் செஞ்சிருக்கிறாரு…! ஒட்டுமொத்தமாக மிரண்ட ஆஸி.

எட்ஜ்பாஸ்டன்: ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்து இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் சாதனை படைத்து இருக்கிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் பெருத்த எதிர் பார்ப்புடனும், பரபரப்புடனும் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி 374 ரன்களை சேர்த்தனர்.

அமெரிக்காவை அதிர வைத்த தோனி குரல்..!! நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி..! ரசிகர்கள் செம கெத்து அமெரிக்காவை அதிர வைத்த தோனி குரல்..!! நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி..! ரசிகர்கள் செம கெத்து

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 487 ரன்களை சேர்த்தது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2 இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். தம் மீதான களங்கத்தை துடைத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

ஆல் அவுட்

ஆல் அவுட்

கடைசி நாளில் இங்கிலாந்து 398 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 146 ரன்களில் ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலியா அணி, 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

5 நாட்கள் சாதனை

5 நாட்கள் சாதனை

இந்த போட்டியில், இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ், தொடரின் 5 நாட்களும் விளையாடி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரோரி பர்ன்ஸ் 2வது நாள் முழுவதும் பேட் செய்தார்.

3, 4வது நாள்

3, 4வது நாள்

3வது நாளில் 133 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 4ஆம் நாளில் ஆஸ்திரேலிய விளையாடிய பிறகு ஆட்டத்தை ஆரம்பித்த ரோரி பர்ன்ஸ் 21 பந்துகள் எதிர்கொண்டார்.

வித்தியாசமான சாதனை

வித்தியாசமான சாதனை

5வது நாளில் 11 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 5 நாட்களும் விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான சாதனையை படைத்தார் ரோரி பர்ன்ஸ். முன்னதாக பாய்காட், லாம்ப், ப்ளிண்டாப், கிம் ஹூஜஸ், ரவி சாஸ்திரி, அட்ரியன் க்ரிபித், அல்விரோ பீட்டர்சன், புஜாரா ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர்.

Story first published: Monday, August 5, 2019, 20:50 [IST]
Other articles published on Aug 5, 2019
English summary
England player Rory joseph burns made a record that batted 5 days in first ashes against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X