For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கைகொடுக்காத 3வது போட்டி... மழை குறுக்கீட்டால் தாமதம்

ஓல்ட் ட்ரபோர்ட் : இங்கிலாந்தின் சௌதாம்டனில் ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3வது போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டால் தாமதமாகியுள்ளது.

Recommended Video

ICC launch qualification path for 2023 World Cup

கடந்த 4 மாதங்களாக தடை பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ங்க... ஓட்டத்த துவக்கி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறணும்ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ங்க... ஓட்டத்த துவக்கி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறணும்

3வது போட்டி நடைபெற்று வருகிறது

3வது போட்டி நடைபெற்று வருகிறது

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 117 நாட்களாக தாமதப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளன. இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி சௌதாம்டனின் ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கி நடைபெற்று வருகிறது.

2வது இன்னிங்சில் 226 ரன்கள், டிக்ளேர்

2வது இன்னிங்சில் 226 ரன்கள், டிக்ளேர்

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 369 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்துள்ளது. இதனிடையே முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 197 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மழை குறுக்கீட்டால் தாமதம்

மழை குறுக்கீட்டால் தாமதம்

இந்நிலையில் இன்று துவங்கிய 4வது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் தடைபட்டது. இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில், தற்போது மழை அவர்களை சோதனைக்குள்ளாக்கியுள்ளது.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

399 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சை எதிர்கொண்டுள்ளது. ஆயினும் உணவு இடைவேளை வரையிலும் மழை காரணமாக ஆட்டம் துவங்கப்படவில்லை. இந்த தொடரில் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் இங்கிலாந்து பௌலர் ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்டுகள் கிளப்பில் இணைவார். அவரும் மழை நிற்க காத்திருக்கிறார்.

பயிற்சியாளர் கோரிக்கை

பயிற்சியாளர் கோரிக்கை

தொடரின் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடரில் அந்த அணி வீரர்கள் யாரும் சதமடிக்காததை சுட்டிக் காட்டியுள்ள பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், சதமடிக்க முழு முயற்சி மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.

6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து பௌலர் பிராட், இரண்டாவது இன்னிங்சில் 6 ஓவர்களில் கிடைத்த சொற்ப நேரத்திலேயே மேற்கிந்திய துவக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல்லை டக் அவுட்டாக்கியும், கெமர் ரோச்சை 4 ரன்களிலும் அவுட்டாக்கினார்.

Story first published: Monday, July 27, 2020, 20:54 [IST]
Other articles published on Jul 27, 2020
English summary
West Indies coach Phil Simmons has urged his batsmen to save the series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X