For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்வி விரக்தி.. அம்பயரை முன்வைத்து 'பஞ்சாயத்துக்கு' ரெடியாகும் இங்கிலாந்து அணி

By Veera Kumar

நாக்பூர்: 2வது டி20 போட்டியில் தோல்வியடைந்தநிலையில், நடுவர் மீது புகார் தெரிவிக்க உள்ளதாக இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

நேற்று நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஜோ ரூட், ஓவரின் முதல் பத்திலேயே எல்.பி.டபிள்யூ ஆனார்.

பும்ரா வீசிய பந்து பேட்டில் பட்டு, கால் காப்பில் பட்டது. இருப்பினும், நடுவர் சம்சுதீன் அதை அவுட் என அறிவித்தார். டி.ஆர்.எஸ் நடைமுறை இல்லாத நிலையில், வேறு வழியின்றி வெறுப்புடன் வெளியேறினார் ஜோ ரூட்.

அபாரம்

அபாரம்

ஜோ ரூட் மொத்தம் 40 பந்துகளை சந்தித்து, வலுவான நிலையில் பேட் செய்து கொண்டிருந்தார். பேட்டிங்கிற்கு மிகவும் கஷ்டமான பிட்சில் அவர் 40 பந்துகளை தாக்குப்பிடித்து நின்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியை அவர் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அவுட்டான நிலையில் புதிய பேட்ஸ்மேன்களால் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இந்தியாவிடம் தோற்றது.

கேப்டன் கவலை

கேப்டன் கவலை

கைக்கு கிடைத்த வெற்றி நழுவி போய்விட்ட வருத்தத்தில் உள்ளார் இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன். அவரது கோபம் நடுவர் மீது திரும்பியுள்ளது. எல்லோருக்கும் ஏறத்தாழ தெளிவாக அது பேட்டில் பட்டு போன பந்து என்று தெரிந்தும், நடுவர் சொதப்பிவிட்டார் என்ற ஆதங்கம் அவருக்கு.

டி.ஆர்.எஸ். வேண்டும்

டி.ஆர்.எஸ். வேண்டும்

இதுகுறித்து மோர்கன் கூறுகையில், போட்டி ரெஃப்ரி மூலம், நடுவரின் தீர்ப்பு குறித்து இங்கிலாந்தின் கருத்து பதிவு செய்யப்படும். டி20 போட்டிகளில் டி.ஆர்.எஸ் நடைமுறை இல்லாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை. இதற்கும் ஆவண செய்ய வேண்டும்.

இங்கிலாந்தின் வாய்ப்பு

இங்கிலாந்தின் வாய்ப்பு

இந்த போட்டியில் இங்கிலாந்துதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எல்.பி.டபிள்யூ முடிவு போட்டியின் ரிசல்ட்டை மாற்றி விட்டது என்றார். இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையொன்று, நடுவர் மற்றும் பும்ராவால் இங்கிலாந்து தோற்றதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, January 30, 2017, 14:20 [IST]
Other articles published on Jan 30, 2017
English summary
England captain Eoin Morgan today (January 29) expressed his frustration over the quality of umpiring and indicated that the team management will give their feedback to the Match Referee.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X