For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி அணிக்கு வெட்டிச் செலவு வைக்கும் யுவராஜ் சிங்!

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் யுவராஜ் சிங் ஐபிஎல் போட்டியில் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் டெல்லி அணி பெரிய தொகையை கொட்டி அழும் நிலை ஏற்பட்டுள்ளதாம். அதாவது அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்குமான செலவுக் கணக்கு ரூ. 6.45 லட்சமாம்.

கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிகப் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங், பெரிய அளவில் சோபிக்காமல் விஜய் மல்லையாவை புலம்ப வைத்தார்.

இந்த முறை அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை புலம்ப வைத்து வருகிறார். அவரால் பெரும் செலவுதான் ஏற்படுகிறதே தவிர வரவு என்றும் எதுவும் இல்லையாம். இந்த தொடரில் இதுவரை அவர் பெரிதாக சோபிக்கவே இல்லை.

நேற்று நடந்த பெங்களூருக்கு எதிரான போட்டியின்போது வெறும் 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பி ரசிகர்களின் கடும் கோபத்துக்குள்ளானார் யுவராஜ். நடப்புத் தொடரில் ஒரு அரை சதத்துடன் 7 போட்டிகளில் மொத்தமே 124 ரன்கள்தான் எடுத்துள்ளார் யுவராஜ்.

இருப்பதிலேயே ரொம்ப மோசம் யுவராஜ்தான்

இருப்பதிலேயே ரொம்ப மோசம் யுவராஜ்தான்

டெல்லி அணியிலேயே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் யுவராஜ் மட்டுமே. அந்த அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் 227 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் டுமினி 220, மயங்க் அகர்வால் 150 ரன்களுடன் உள்ளனர். யுவராஜ் 4வது இடத்தில்தான் உள்ளார்.

பிளே ஆப் சுற்றுக்கு வருமா

பிளே ஆப் சுற்றுக்கு வருமா

பாதி போட்டிகளை டெல்லி அணி முடித்து விட்டது. தற்போது அந்த அணி 5வது இடத்தில் இருக்கிறது. முதல் நான்கு இடங்களில் வரும் அணிகளே பிளே ஆப் பிரிவுக்கு தகுதி பெறும்.

கேவலமான தோல்வி

கேவலமான தோல்வி

நேற்று டெல்லி அணி சொந்த மண்ணிலேயே 95 ரன்களுக்கு சுருண்டு போனது. இதை 10 விக்கெட் வித்தியாசத்தில் அழகாக துரத்தி வெற்றி பெற்றது பெங்களர் அணி.

கையைக் கடிக்கும் யுவராஜ்

கையைக் கடிக்கும் யுவராஜ்

யுவராஜுக்கு டெல்லி அணி தரும் சம்பளத்தை ரன் கணக்குடன் சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். அதாவது அவரது ஒரு ரன்னுக்கு ரூ. 6.45 லட்சம் பணத்தை கொட்டுகிறது டெல்லி அணி. இது ரொம்ப டூ மச்சாகும். அதாவது கம்பெனிக்கு நஷ்டம்தான் இதனால்.

அதெல்லாம் அப்புறம்தான்

அதெல்லாம் அப்புறம்தான்

ஒரு சீனியர் வீரராக சக வீரர்களை வழி நடத்துகிறார், நன்றாக பீல்டிங் செய்கிறார், ஆல் ரவுண்டராக இருக்கிறார், உத்திகள் வகுப்பதில் உதவுகிறார் என்பதெல்லாம் இருந்தாலும் கூட அவரது முக்கியமான வேலை பேட்டிங்தான். அதைச் சொதப்புகிறார் யுவராஜ் என்பது அணிக்குமே கூட நெருக்கடியான நிலையைத்தான் ஏற்படுத்துகிறது.

போட்டிக்கு ரூ. 1 கோடி

போட்டிக்கு ரூ. 1 கோடி

யுவராஜ் சிங் 14 போட்டிகளில் விளையாடினால் அவருக்கு ரூ. 16 கோடி சம்பளமாக கிடைக்கும். தற்போது 7 போட்டிகளில் ஆடியுள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்புட்டு சம்பளம் தேவையா

இம்புட்டு சம்பளம் தேவையா

சமீபத்தில் கூட உங்களுக்கு ரூ. 16 கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளனரே, இது அதிகமாக தெரியவில்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, நிச்சயமாக ஏலம் நடந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் அவ்வளவு பணம் கேட்கவும் இல்லை.

எவ்வளவு கொடுத்தாலும் விளையாடுவேன்

எவ்வளவு கொடுத்தாலும் விளையாடுவேன்

எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருந்தாலும் நான் நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருப்பேன். நான் இத்தனை வேண்டும் என்று எப்போதுமே நெருக்கடி தந்ததில்லை. கேட்டதில்லை என்று கூறியிருந்தார் யுவராஜ் சிங்.

ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்!

ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்!

டெல்லி அணிக்கும், ரசிகர்களுக்கும் சந்தோஷம் தருவது போல மீதமுள்ள போட்டிகளில் யுவராஜ் சிங் அதிரடியாக ஆட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் அவருக்குத் தரப்படும் சம்பளத்திற்கும் மதிப்பு, மரியாதை இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

நீங்க சொல்லக் கூடாதா டாடி!

நீங்க சொல்லக் கூடாதா டாடி!

டோணியைப் பிடித்து திட்டு திட்டென்று திட்டி வரும் யுவராஜின் தந்தை, தனது மகனுக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்து, ஊக்கம் கொடுத்து நன்றாக விளையாடச் சொல்லலாமே...!

Story first published: Monday, April 27, 2015, 13:07 [IST]
Other articles published on Apr 27, 2015
English summary
Yuvraj Singh's runs in Indian Premier League 2015 (IPL 8) are getting expensive by the day after the left-hander's yet another failure with the bat for Delhi Daredevils (DD) last night (April 26).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X