For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலிய 'ஏ' அணியுடன் சென்னையில் மோதல்.. இந்திய அணிக்கு புஜாரா கேப்டன்!

By Veera Kumar

மும்பை: ஆஸ்திரேலிய ஏ அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் இந்திய ஏ அணிக்கு செடேஸ்வர் புஜாரா கேப்டனாக செயல்படுவார்.

இளைய தலைமுறையினரின் திறமையை வளர்ப்பதற்காக இந்திய கிரிக்கெட்டின் ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோத ஷெடியூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை 22-25 வரையிலும், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரையிலும், சென்னையில் இரு ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொன்றும், 4 நாட்கள் கொண்ட ஆட்டங்களாக இருக்கும்.

EXPERIENCED PUJARA TO LEAD INDIA A SQUAD

இந்த அணிக்கு தலைமை வகிக்க உள்ள, புஜாரா, இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 27 வயது வீரர். கர்நாடகாவின் லோகேஷ் ராகுல், மும்பையின் ஷ்ரேயாஸ் ஐயர், திழக ஆப்-ஸ்பின்னர் பாபா அபரஜித், மற்றும் ஷர்துல் தாகூர் போன்ற இளம் திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உமேஷ் யாதவ், வருண் ஆரோன், அமித் மிஷ்ரா மற்றும் பிரக்யான் ஓஜா ஆகிய அனுபவ வீரர்கள் பவுலிங் துறையை பார்த்துக்கொள்ள உள்ளனர்.

Story first published: Tuesday, June 30, 2015, 12:04 [IST]
Other articles published on Jun 30, 2015
English summary
Cheteshwar Pujara has been picked to lead the India A squad for the two four-day matches against Australia A in July-August.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X