கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்.. தீவிரமடைந்த நினைவாற்றல் பிரச்னை.. பிஎஸ்எல்-ல் இருந்து டூப்ளசிஸ் விலகல்!

அபுதாபி: ஃபீல்டிங்கின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டூப்ளசிஸ் பிஎஸ்எல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 யுவராஜ் அடித்த '6 சிக்ஸர்கள்'.. நேரில் கிளம்பி வந்த பிராட் தந்தை.. என்ன செய்தார் தெரியுமா? யுவராஜ் அடித்த '6 சிக்ஸர்கள்'.. நேரில் கிளம்பி வந்த பிராட் தந்தை.. என்ன செய்தார் தெரியுமா?

இந்த தொடரில் கட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெசாவர் சல்மி அணிகள் மோதிய 19வது லீக் போட்டியில் விபத்து ஏற்பட்டது.

படுகாயம்

படுகாயம்

முதல் இன்னிங்சின் 7 வது ஓவரின் போது, பெசாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது பீல்டிங்கில் இருந்த கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக டூப்ளசிஸ் முகம், ஹசனின் காலில் பட்டு படு மோசமாக விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

படுகாயமடைந்த டூப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர்

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக நேற்றைய போட்டியில் டூப்ளசிஸால் தொடர்ந்து ஆட முடியாமல் போனது.

 தொடரில் இருந்து விலகல்

தொடரில் இருந்து விலகல்

இந்நிலையில் டூப்ளசிஸுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமாக இருப்பதால் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று இரவு தென்னாப்பிரிக்கா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ட்வீட் செய்திருந்த டூப்ளசிஸ், எனக்காக அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. காயம் காரணமாக எனக்கு நினைவாற்றல் போனது. மிக விரைவில் விளையாட களத்திற்கு வருவேன் என நினைக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

பின்னடைவு

பின்னடைவு

பிஎஸ்எல் தொடரின் இந்த சீசனில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் அந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசியாக உள்ளது. தற்போது நட்சத்திர வீரர் டூப்ளசிஸ் விலகியிருப்பது அந்த அணிக்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Faf du Plessis ruled out of PSL due to concussion, After a nasty collision with his Quetta Gladiators teammate Mohammad Hasnain
Story first published: Wednesday, June 16, 2021, 21:24 [IST]
Other articles published on Jun 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X