முட்டை வாங்கியதில் ரோகித் சாதனை.. ஹிட்மேன் அவுட்டானதும் சந்தோஷப்பட்ட ரசிகர்கள்.. என்னாச்சு ?

திருவனந்தபுரம் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

Recommended Video

IND vs SA 1st T20 Rohit Sharma, virat kohli கொடுத்த ஏமாற்றம்!*Cricket

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கூட கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சுதென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு

டக் அவுட்

டக் அவுட்

பேட்ஸ்மேன்கள் பந்துகளை எதிர்கொண்டு விளையாட மிகவும் சிரமப்பட்டனர். கேசவ் மகாராஜா மட்டும் பொறுப்பாக விளையாடி 41 ரன்கள் சேர்க்க, தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது, இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தாம் எதிர்கொண்ட 2வது பந்தில் டக் ஆனார்.

சோகமான சாதனை

சோகமான சாதனை

இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 10 டக்குகளை பெற்று இருக்கிறார். இதே போன்று ஒரே ஆண்டில் அதிக டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சோகத்தை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் ரோகித் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டக் அவுட் ஆனார்.

சந்தோஷபட்ட ரசிகர்கள்

சந்தோஷபட்ட ரசிகர்கள்

இந்த நிலையில், பொதுவாக கேப்டனோ, சொந்த அணி வீரரோ ஆட்டமிழந்தால் ரசிகர்கள் அமைதியாகி விடுவார்கள். ஆனால் கேரள ரசிகர்கள் திடீரென்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். என்ன டா இது புதுசா இருக்கு என்று தொலைக்காட்சியில் பார்த்த அனைவருக்கும் ஆச்சியமாக இருந்திருக்கலாம்.

காரணம் இது தான்

காரணம் இது தான்

உண்மையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும், அடுத்தது களத்திற்கு விராட் கோலி வருவார் என்பதாலேயே ரசிகர்கள் உற்சாக குரல் கொடுத்து, அவரை வரவேற்றனர். கேரளாவில் விராட் கோலிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். விராட் கோலிக்காக மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். ஆனால் கோலியும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fans hilarious celebration after Rohit sharma got duck out முட்டை வாங்கியதில் ரோகித் சாதனை.. ஹிட்மேன் அவுட்டானதும் சந்தோஷப்பட்ட ரசிகர்கள்.. என்னாச்சு ?
Story first published: Wednesday, September 28, 2022, 22:10 [IST]
Other articles published on Sep 28, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X