For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வருஷமா ஏன் இப்படி குழப்பம் செய்தீர்கள்? கோலி, ரவி சாஸ்திரியை கிழித்தெடுக்கும் முன்னாள் கேப்டன்

Recommended Video

கோலி, ரவி சாஸ்திரியை கிழித்தெடுக்கும் முன்னாள் கேப்டன்

மும்பை: இந்திய அணியில் 2 ஆண்டுகளாக அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பதற்கு யார் காரணம்? என்பதை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கோலியும், ரவி சாஸ்திரியும் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.

உலக கோப்பை அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வி, கோலியையும், கோச் ரவி சாஸ்திரியையும் பாடாய் படுத்தி வருகிறது. லீக் சுற்றில் தோற்று வெளியேறி இருந்தாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

சிறந்த பேட்டிங் வரிசை, அற்புதமாக பவுலர்களை வைத்துக் கொண்டு ஜெயிக்க வேண்டிய மேட்சை கோட்டை விட்டு, வசவுகளை இந்திய அணி வாங்கி வருகிறது. பல முன்னாள் வீரர்களும் அரையிறுதியில் இந்திய அணியின் செயல்பாட்டால் பொங்கி இருக்கின்றனர்.

திகைப்பு

திகைப்பு

அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். நியூசிலாந்து தோல்வி, தமக்கு திகைப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாக கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

தப்புத்தப்பான முடிவு

தப்புத்தப்பான முடிவு

ரசிகர்கள் மக்களுக்கு, 2 ஆண்டுகளாக ஏன் தப்புத்தப்பான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை தெரிவிக்க வேண்டும். நியூசி.க்கு எதிராக 24 ரன்களுக்கு 4 விக். என்ற நிலையில் 2 தாக்குதல் வீரர்களான பாண்டியா, பன்ட் ஏன் இறக்கப்பட்டனர். அது சரியல்ல.

அதிரடி வீரர்கள் ஏன்?

அதிரடி வீரர்கள் ஏன்?

அந்த நேரத்தில் களத்தில் தோனி இறங்கி, ரிஷப் பன்டை வழிநடத்தியிருக்க வேண்டும். பந்துகள் ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது அதிரடி வீரர்களை இறக்கியது அதிர்ச்சி. 2 ஆண்டுகளாக அதிர்ச்சிகர முடிவுகள் பல எடுக்கப்பட்டு உள்ளன.

ஏன் மயங்க் அகர்வால்?

ஏன் மயங்க் அகர்வால்?

அம்பத்தி ராயுடு இந்திய அணியில் ஆடியிருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒரு நாள் போட்டியில் ஆடாத மயங்க் அகர்வாலை ஏன் அழைத்தீர்கள்? உலக கோப்பை அரையிறுதி, இறுதியில் அறிமுகம் செய்வார்களா? ராயுடு தான் ஆடியிருக்க வேண்டும். 4ம் இடத்துக்கு சரியான வீரர் கிடைத்துவிட்டார் என்று கடந்தாண்டு சொன்னீர்கள்? அவர் யார்?

4ம் இடத்தில் யார்?

4ம் இடத்தில் யார்?

அந்த இடத்தில் தற்போது இருப்பது யார்? என்னவாயிற்று அந்த இடம்? மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அணி நிர்வாகம் தெளிவாக விளக்க வேண்டும். இந்த முடிவுகளுக்கு எல்லாம் கோலி, ரவிசாஸ்திரி தான் காரணம். எனவே, சரியான பதில் அளிக்க வேண்டியது அவசியம்.

சமாளிப்பு ஏன்?

சமாளிப்பு ஏன்?

ரகானே 4ம் நிலைக்கு உரிய வீரர். ஆனால், தொடக்க வீரர், மிடில் ஓவர்களில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை என்று ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் ஏன்? எவ்வளவு சமாளிப்புகளை கேட்பது? என்று கூறினார்.

Story first published: Saturday, July 13, 2019, 9:20 [IST]
Other articles published on Jul 13, 2019
English summary
Former captain sunil gavaskar raised many questions against kohli and ravi shastri?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X