For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நாட்டை விட உங்களுக்கு அது முக்கியமா?”.. சூடுபிடிக்கும் கேப்டன்சி சர்ச்சை.. கொந்தளித்த கபில் தேவ்!

மும்பை: இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் கபில் தேவும் கடும் கோபமடைந்துள்ளார்.

Recommended Video

Furious Kapil Dev lashes out at Kohli, Ganguly for ‘talking badly about each other in public

விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தொடங்கிய சர்ச்சை இன்று வரை நீடித்து வருகிறது.

ஒருநாள் அணியின் கேப்டன்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டது, கோலியிடம் பதவி விலக வேண்டாம் என நிஜமாகவே கங்குலி கூறினாரா என பல கேள்விகளுக்கு உண்மை தெரியாமல் உள்ளது.

விராட் கோலி, அஸ்வினுக்கு ஓய்வு? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு..!! இந்திய அணி நாளை அறிவிப்பு.. IND vs WIவிராட் கோலி, அஸ்வினுக்கு ஓய்வு? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு..!! இந்திய அணி நாளை அறிவிப்பு.. IND vs WI

சூடுபிடித்த சர்ச்சை

சூடுபிடித்த சர்ச்சை

இந்த சூழலில் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி திடீரென விலகுவதாக அறிவித்தார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் இருந்தால் நல்லது என பிசிசிஐ கருதியது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்தும் விலகியதால், விராட்டிற்கும் - பிசிசிஐ-க்கும் இடையே நடக்கும் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது என தெளிவாக தெரிகிறது.

ரவிசாஸ்திரி பேச்சு

ரவிசாஸ்திரி பேச்சு

இந்த பிரச்சினையில் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்தார். அதில், உலகக்கோப்பை வென்றுக்கொடுத்தால் தான் சிறந்த வீரரா?.. அப்படியென்றால் கங்குலி, டிராவிட் ஆகியோரெல்லாம் எந்த உலகக்கோப்பையை வென்றார்கள்? அவர்கள் சிறந்த வீரர்கள் இல்லையா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

கபில் தேவ் கோபம்

கபில் தேவ் கோபம்

இந்நிலையில் முன்னாள் வீரர் கபில் தேவ்-ம் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், முதலில் விராட் கோலி செல்போன் அழைப்பை ஏற்று, பிசிசிஐ-யிடம் பேச வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை சரிசெய்யுங்கள். தனிப்பட்ட கோபங்களை விட நாடும், தேசத்திற்கான அணியும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் .

என்னதான் தீர்வு

என்னதான் தீர்வு

நான் கேப்டனாக பதவியேற்ற போது, தேவையான அனைத்து விஷயங்களும் செய்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் எப்போதுமே அதே போன்று இருக்காது. அதற்காக கேப்டன்சியை விட்டு விலக வேண்டுமெ என்று அர்த்தமல்ல. விராட் கோலியின் நிலையும் அதே தான். என்னைப் பொறுத்தவரையில் விராட் இனி சிறந்த பேட்ஸ்மேனாக ரன்களை குவிக்க வேண்டும் என கபில்தேவ் பேசியுள்ளார்.

Story first published: Wednesday, January 26, 2022, 15:26 [IST]
Other articles published on Jan 26, 2022
English summary
Former Cricketer Kapil Dev requested Virat Kohli and BCCI to sort out their issue immediately
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X