For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இனி யாருக்கும் ரெஸ்ட் கிடையாது”.. கவாஸ்கர் யோசனையால் கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்ன காரணம்!

மும்பை: உலகக்கோப்பையை வெல்வதற்கு சுனில் கவாஸ்கர் கூறியுள்ள யோசனையால் இந்திய அணி வீரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி மோசமான தோல்வியுடன் வெளியேறியதால், எங்கு தவறு நடந்தது என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதே போல அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதற்கான பணிகளையும் தற்போது இருந்தே செய்து வருகின்றது.

3வது ஒருநாள் போட்டி நடக்குமா?.. இந்திய அணிக்கு காத்துள்ள கண்டம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 3வது ஒருநாள் போட்டி நடக்குமா?.. இந்திய அணிக்கு காத்துள்ள கண்டம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 இந்திய அணி ஏற்பாடு

இந்திய அணி ஏற்பாடு

2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்தில் வரலாம். அதுவரையில் இந்திய அணி தயார் ஆவதற்கு வெறும் 25 ஒருநாள் போட்டிகள் மட்டுமே உள்ளன. இதிலும் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடையவுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ரால் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

கவாஸ்கர் பேச்சு

கவாஸ்கர் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணிக்கு கவாஸ்கர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், பேட்டிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களே உள்ள சூழலில் வீரர்களுக்கு இப்படி ஓய்வுகளெல்லாம் கொடுக்கக்கூடாது. எந்த அளவிற்கு இணைந்து பேட்டிங் செய்கிறார்களோ, அந்த அளவிற்கு தான் ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்படும்.

நம்பிக்கை கொடுக்கும்

நம்பிக்கை கொடுக்கும்

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டுமென்றால், பேட்டிங் பார்ட்னரின் முடிவுகளில், மற்றொரு பேட்டருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அது தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருந்தால் தான் ஏற்படும். எனவே இனி வரும் போட்டிகளில் ஓய்வு என்பதையே கொடுக்காமல் அனைத்து சீனியர் வீரர்களையும் களமிறக்கி தொடர்ச்சியாக ஆட வைத்தால் தான் உலகக்கோப்பையை வெல்ல முடியும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

டிராவிட்டையும் விளாசல்

டிராவிட்டையும் விளாசல்

வீரர்கள் குறித்து விளாசிய கவாஸ்கர், ராகுல் டிராவிட்டையும் விட்டுவைக்கவில்லை. பயிற்சியாளர்கள் ஓய்வு எடுப்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. நான் பயிற்சியாளராக இருந்தால், எனது அணி வீரர்கள் குறித்தும், அணி நிர்வாகம் குறித்தும் புரிந்துவைத்திருப்பேன். அப்போது தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அந்த பல ஓய்வுகள் உங்களுக்கு உண்மையிலேயே எதற்கு தேவைப்படுகிறது? என டிராவிட்டிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Tuesday, November 29, 2022, 16:36 [IST]
Other articles published on Nov 29, 2022
English summary
Former Cricketer Sunil gavaskar's Idea for world cup 2023 leaves Team India players in Panic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X