For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக தரத்துல இருந்தா மட்டும் போதாது... பொறுப்போட விளையாடனும் -லஷ்மன்

சென்னை : இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோற்க முழுமுதல் காரணம் கேப்டன் விராட் கோலி மற்றும் பௌலர் ஜஸ்பிரீத் பும்ராதான் என்று முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

Shami scored more than Virat Kohli| ஷமியால் கோலிக்கு வந்த அவமானம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் சராசரியாக 9 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ள நிலையில் வெற்றி கண்டிப்பாக சாத்தியப்படாது என்றும் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

Former Cricketer VVS Laxman blames Virat Kohli for defeat against New Zealand

மேலும் இந்த தொடரில் இந்தியா பொறுப்புடன் விளையாடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள விவிஎஸ் லஷ்மன், இந்தியாவின் ஆட்டம் ஏமாற்றமளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து -இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதல்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாததே காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் தொடரின் 4 இன்னிங்சிலும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 38 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இப்படி நடக்கும்னு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டார்.. கேப்டன் கோலிக்கு ஷமியால் வந்த அவமானம்!

அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 19 ரன்களை எடுத்துள்ள கோலி, ஒரு போட்டியில் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை. டிரெண்ட் போல்ட் மற்றும் ஜாமீசனின் பந்துவீச்சை சமாளிக்க அவர் மட்டுமின்றி இந்திய அணி மொத்தமும் திணறியது கண்கூடாக தெரிந்தது.

இதனிடையே நியூசிலாந்திற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததற்கு கேப்டன் விராட் கோலி மற்றும் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இருவருமே காரணம் என்று முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மன் குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ள இவர்கள் இருவரும் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடியது ஏமாற்றமளித்ததாகவும் லஷ்மன் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி இந்த தொடரில் விளையாடிய போட்டிகளில் சராசரியாக 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியினருக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டுள்ள விவிஎஸ் லஷ்மன், ஆனால் இந்திய அணியினர் பொறுப்புடன் விளையாடவில்லை என்றும் இந்திய அணியினரின் ஆட்டம் ஏமாற்றம் அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ள நிலையில், இந்திய கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்ற பின்பு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது இதுவே முதல்முறை. இதனிடையே, விராட் கோலியின் சமீபத்திய ஆட்டங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. டெஸ்ட் தொடரில் மொத்தமாக 38 ரன்கள் அடித்துள்ள அவர், இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 218 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியாக உள்ளது.

Story first published: Monday, March 2, 2020, 17:38 [IST]
Other articles published on Mar 2, 2020
English summary
VVS Laxman said India lacked the required discipline in all departments
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X