For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்

ராஞ்சி : இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகனாக பல்வேறு வெற்றிகளுக்கு சொந்தக்காரராக விளங்கியவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி.

Recommended Video

Dhoni's best 10 quotes in Tamil

கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளை தவிர்த்து வந்தாலும் ரசிகர்களின் கனவு காதலனாக விளங்கி வருகிறார் தோனி.

இவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் இப்போதும் குறையவில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் சமீபத்தில் வந்த அவரது பிறந்தநாள் கொண்டாட்டம்.

ரசிகர்களிடம் கிரேஸ்

ரசிகர்களிடம் கிரேஸ்

இந்தியாவின் சிறிய பிரதேசத்தில் இருந்து கிரிக்கெட் மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் ஆட்டத்தில் தீவிரமாக இருந்தபோதிலும் சரி, கடந்த ஒரு ஆண்டுகாலமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ள போதிலும் இவருக்கான கிரேஸ் ரசிகர்களிடம் சிறிதும் குறையவில்லை. அந்த அளவிற்கு அவருக்கென்று தனிப்பட்ட திறமை மட்டுமின்றி கவர்ச்சியும் அதிகமாக காணப்படுகிறது.

கடமையில் மட்டுமே கவனம்

கடமையில் மட்டுமே கவனம்

பெரிய அளவிலான முடிவுகளை எடுக்கும்போதும் தன்னை மட்டுமின்றி தன்னை சுற்றியுள்ளவர்களையும் கூலாக வைத்து கொள்வார் தோனி. அதனால்தான் கேப்டன் கூல் என்ற பெயரும் அவருக்கு கிடைத்துள்ளது. ஆயினும் அதைப்பற்றியெல்லாம் காதிலும் ஏன் கருத்திலும் அவர் போட்டுக் கொள்ள மாட்டார். தன் கடன் பணி செய்வதே என்ற கருத்திற்கு ஏற்ப அவரது செயல்பாடு இருக்கும்.

புகழ்பெற்ற ஜோடி

புகழ்பெற்ற ஜோடி

தன்னுடைய கேரியரை மிகவும் கிளியராகத்தான் வைத்துக் கொண்டார் தோனி. இவரது புகழ், வேகம், திறமை, அழகு போன்ற பல்வேறு காரணங்களால் இவர் மீது காதல் வசப்பட்டவர்கள் அதிகம்தான். ஆயினும் சாக்ஷியின்மீதுதான் தன்னுடைய காதல் எல்லாம் என்று நிரூபித்து காட்டியவர். காட்டி வருபவர். கிரிக்கெட் உலகில் இந்த ஜோடி மீது கண் போடாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். அவ்வளவு அன்னியோன்யம்.

திருமண நாள் கொண்டாட்டம்

திருமண நாள் கொண்டாட்டம்

புரொபஷனல் வாழ்க்கையில் மிகவும் பர்பெக்ட்டாக இருப்பது போலவே பர்சனல் வாழ்க்கையிலும் தோனி தான் சளைத்தவனில்லை என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபத்தில் தோனி -சாக்ஷி திருமண நாள் கொண்டாட்டத்தையும் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது இந்த ஜோடி.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

தோனியின் பிறந்த தினம் 7... ஜெர்சி நம்பரும் 7... நம்பர் ஏழிற்கும் அவருக்குமான தொடர்பு அதிகம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த தோனியின் பிறந்ததினத்தை வெகு விமரிசையாக கொண்டாட முடியவில்லை என்றாலும், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாம் செய்தனர் அவர்கள்து ரசிகர்கள். தெருக்கு தெரு கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வுகளும் காணப்பட்டது.

அனைவர் நினைவிலும் தோனி

அனைவர் நினைவிலும் தோனி

அவரது பிறந்ததினத்தையொட்டி டிபி வெளியிட்டு மகிழ்ந்தது தோனி கேப்டனாக உள்ள ஐபிஎல் அணி சிஎஸ்கே. அவரது வீட்டிற்கே சென்று கொண்டாடி மகிழ்ந்தனர் பாண்டியா பிரதர்ஸ். கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர். தான் பீல்டில் இல்லையென்றாலும் பீல்டில் உள்ளவர்கள் அனைவரும் நினைத்து பார்க்கும் பெருமைக்குரியவன் தான் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நிரூபித்தார் தோனி.

அதிகமான சாதனைகள்

அதிகமான சாதனைகள்

ஒருநாள் போட்டிகளில் அதிகமான நாட் -அவுட் சாதனை, 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை வெற்றி, டி20 உலக கோப்பை வெற்றி என பல்வேறு தோனி குறித்த சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பக்கம் போதாது. கங்குலிக்கு பிறகு மிகவும் சக்சஸ்புல்லான கேப்டன் என்பதையும் தோனி மிக குறுகிய காலத்திலேயே நிரூபித்துள்ளார்.

வெறித்தனமான சாதனை

வெறித்தனமான சாதனை

இந்த சாதனைகளெல்லாம் அவருக்கு மிகவும் சாதாரணம். ஆனால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தோனியின் சாதனைக்கு ஈடு இணை இல்லை. அவரது பிறந்த தினத்தையொட்டி ராஞ்சியின் அவரது பண்ணை வீட்டில் காத்திருந்து தோனியின் பைக் ரைடை ரசிக்கும் அளவிலான வெறித்தனமான ரசிகர்களை தோனி பெற்றுள்ளதே மிகச்சிறந்த அவரது சாதனை.

இமாலய சாதனை

இமாலய சாதனை

தான் ஒரு வருடம் பீல்டில் இல்லையென்றாலும், ரசிகர்களை, அவர்களது அன்பை கட்டிப்போட்டு இருப்பதே தோனியின் இமாலய சாதனை. அவர் ஐபிஎல் போட்டிகளிலாவது ஆட மாட்டாரா என்ற கனவை கொரோனா வைரஸ் தகர்த்துள்ளது. அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே கேப்டனாக இருப்பார் என்று சொல்ல வைத்துள்ளது அவரது ஆட்டம். ஐபிஎல்லில் 3 முறை கோப்பையை பெற்றுத் தந்துள்ள சாதனையும் தோனிக்கு உள்ளது.

ரசிகர்களின் அன்பு சிம்மாசனம்

ரசிகர்களின் அன்பு சிம்மாசனம்

இவ்வாறு திரும்பிய பக்கமெல்லாம் சாதனைகளை படைத்துள்ள தோனிக்கு, ரசிகர்கள் தங்கள் அன்பென்னும் சிம்மாசனத்தை கொடுத்துள்ளார்கள். அதற்கு அவர் தகுதியானவர்தான். தன்னுடைய ஆட்டத்தின் மூலம் மட்டும் அதை சாதிக்கவில்லை தோனி. மாறாக, சக வீரர்களுடன் அவர் பழகும் மாண்பு, அமைதியான மற்றும் ஆக்ரோஷமான அவரது செயல்பாடுகள் போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கிறது. தல விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் 'தல'... 'தல'தான்...

Story first published: Sunday, July 12, 2020, 16:11 [IST]
Other articles published on Jul 12, 2020
English summary
Dhoni's successful carrier... Dhoni the best
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X