கிரிக்கெட் முன்பு போல் இல்லை.. பல மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது.. ஹேமாங் பதானி தந்த செம ஐடியா

சென்னை : 2022 ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்திய கிரிக்கெட் அணியில் 7 கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். விராட் கோலி அனைத்து கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை விளகியதை அடுத்து ரோகித் சர்மா அந்தப் பதவிக்கு வந்தார்.

ஆனால் ரோகித் சர்மா அனைத்து போட்டிகளில் விளையாடாமல் சில தொடர்களில் ஓய்வு எடுத்துக் கொண்டார். எனினும் தற்போது சர்வதேச கிரிக்கெட் அதிக அளவில் நடைபெறுவதால் வீரர்கள் சுழற்சி முறையில் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமாங் பதானி யோசனையை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மாவால் அனைத்து தொடர்களும் கேப்டனாக விளையாட முடியாது.

அதிக கிரிக்கெட்

அதிக கிரிக்கெட்

உலக கோப்பை வேறு அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. நமது அணி என்னவென்று இதுவரை நாம் முடிவு செய்யவில்லை. எனவே பல வீரர்களை நாம் சுழற்சி முறையில் பயன்படுத்தி, யார் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என பார்க்க வேண்டும். ஒரே கேப்டன் அனைத்து பிரிவுகளில் விளையாட முடியாது. முன்பு போல் கிரிக்கெட் இல்லை. இப்போது கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. முன்பு போல் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் தற்போது நடைபெறுகிறது.

கிரிக்கெட் மாறிவிட்டது

கிரிக்கெட் மாறிவிட்டது

இதன் காரணமாக வீரர்கள் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது. இதனால் தான் நான் சொல்கிறேன், மூன்று கிரிக்கெட்டுக்கும் மூன்று அணிகளை தனியாக உருவாக்க வேண்டும். நம்மை சுற்றி பாருங்கள். மற்ற அணிகள் எல்லாம் இதை நோக்கித்தான் செல்கிறார்கள். டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மூன்றுமே வெவ்வேறு பிரிவுகளாக உள்ளது. ஆனால் அனைத்துமே கிரிக்கெட் தான். ஆனால் விளையாடும் விதம் மாறிவிட்டது.

ஓட்டப் பந்தயம் போல்..

ஓட்டப் பந்தயம் போல்..

சரியாக சொல்ல வேண்டும் என்றால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஒட்டப் பந்தயம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் என்பது போல் கிரிக்கெட் மாறிவிட்டது. பந்தயங்கள் வேறாக இருந்தாலும் விளையாட்டு ஒன்றுதான். மூன்று பிரிவுகளிலும் மூன்று விதமாக தயாராகி வீரர்கள் செயல்படுவார்கள். இதனால் கிரிக்கெட்டிலும் இந்த முறையை பயன்படுத்துவது கட்டாயமாக விட்டது. நிச்சயம் சொல்கிறேன். இது நடக்கும், ஆனால் எப்போது நடக்கும் என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ரோகித் சர்மா ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஹர்திக் பாண்டியாவை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

 வெற்றி பெற வேண்டும்

வெற்றி பெற வேண்டும்

ஹர்திக் பாண்டியா பிறக்கும்போது தலைமைப் பண்புகள் உடைய வீரராக தெரிகிறார். பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அனைவருமே அனைத்து தொடர்களிலும் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்காக உங்களுக்கு வாய்ப்பு வழங்க ப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. உலக கோப்பை என்ற நிகழ்ச்சிக்கு நாம் எந்த ஆடையை அணிவிக்கப் போகிறோம் என்று தயாராகுவது போன்று நினைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் அனைவரும் நாம் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள்.

 வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

அதற்காக நாம் சிறப்பான முறையில் தயாராக வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து யார் சரியாக விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளர் வேண்டும் என சஞ்சு சாம்சனை நீக்கி விடுகிறீர்கள். தீபக் ஹூடாவுக்கு எதிராக நான் எதையும் சொல்லவில்லை.

சஞ்சு சாம்சன் வேண்டும்

சஞ்சு சாம்சன் வேண்டும்

ஆனால் சஞ்சு சாம்சனை மட்டும் நீக்குவது சரியல்ல. சாம்சன் அடுத்த ஆண்டு உலக கோப்பையில் கண்டிப்பாக விளையாட வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும். அதற்காக நீங்கள் சாம்சனை அதிக போட்டியில் விளையாட வையுங்கள். ஸ்ரேயாஸ் ஐயருக்கு நீங்கள் அதிக அளவில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள். இப்போது நடு வரிசையில் மூன்றாவது வீரர் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஹேமங் பதானி கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Indian cricketer Hemang badani asks bcci to create 3 different teams கிரிக்கெட் முன்பு போல் இல்லை.. பல மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது.. ஹேமாங் பதானி தந்த செம ஐடியா
Story first published: Friday, December 2, 2022, 17:28 [IST]
Other articles published on Dec 2, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X