For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏமாத்திப்புட்டாய்ங்க…! நான் அவுட்டே இல்ல..! 18 வருஷம் கழிச்சி வீடியோ ரிலீஸ் பண்ணிய ஸ்டார் வீரர்

கேன்பரா: 18 ஆண்டுகள் கழித்து தாம் தவறாக அவுட் கொடுக்கப் பட்டதாகவும், தான் அவுட் இல்லை என்றும் ஆஸி.யின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜமைக்கா 2வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீசின் 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை சாய்த்தவர் பும்ரா. அதில் ஹாட்ரிக்கும் அடங்கும். அவரது இந்த சாதனைக்கு நாடெங்கிலும் இருந்தும பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். பும்ராவிற்கு முன்பாக 2001ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. அதில் பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்னே ஆகிய மூவரையும் வீழ்த்தி ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இது தங்கம் நம்பர் 3...! உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்தியா..! குவியும் வாழ்த்துகள்இது தங்கம் நம்பர் 3...! உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்தியா..! குவியும் வாழ்த்துகள்

பதான் ஹாட்ரிக்

பதான் ஹாட்ரிக்

2006ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் ஆகிய மூவரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார் இர்பான் பதான். இதில் ஹர்பஜனின் ஹாட்ரிக் நிகழ்வு தான் இப்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாகி விட்டது.

டுவிட்டரில் வீடியோ

டுவிட்டரில் வீடியோ

அதாவது, 2001ம் ஆண்டு ஹர்பஜன் சிங் வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்டின் வீடியோவை டுவிட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதை கண்ட கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் டிஆர்எஸ் என்ற முறை கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

முக்கிய காரணம்

கில்கிறிஸ்ட் அப்படி பதிவிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஹர்பஜன் ஹாட்ரிக்கில் 2வது விக்கெட்டாக வீழ்ந்தவர் கில்கிறிஸ்ட். ஆனால் அது அவுட் கிடையாது. தொலைக்காட்சி ரீப்ளேவில் கில்கிறிஸ்ட்டின் பேட்டில் பட்டபின்னர் தான் கால்காப்பில் பந்து பட்டது.

ரிவியூ முறை கிடையாது

ரிவியூ முறை கிடையாது

ஆனால் அதை கவனிக்காத அம்பயர் தப்பாக அவுட் என்று கையை உயர்த்தி விடுவார். அம்பயரின் முடிவை எதிர்க்காமல் கில்கிறிஸ்ட் அதிருப்தியுடன் சென்று விடுவார். அவுட் இல்லாததற்கு அவுட் கொடுத்ததால் தான் கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் ரிவியூ கிடையாது என்று இப்போது பதில் டுவீட் செய்துள்ளார்.

18 வருஷம்

18 வருஷம்

பொதுவாக கிரிக்கெட் உலகில், ஜென்டில்மேன் வீரர் என்றால் எல்லோரும் கில்கிறிஸ்டை தான் கை காட்டுவார்கள். காரணம் அவர் அந்தளவுக்கு களத்தில் நேர்மையாக இருக்கக்கூடியவர். பலமுறை அம்பயர் கையை உயர்த்துவதற்கு முன்பே, அது அவுட் என்றால் மறுகணம் பெவிலியன் நோக்கி திரும்பிச் சென்றவர். அப்படிப்பட்ட ஒரு நபரே கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து தாம் அவுட் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, September 1, 2019, 19:36 [IST]
Other articles published on Sep 1, 2019
English summary
Former player gilchrist twitter video goes viral, after 18 years of an incident.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X