For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியை விட்டு விலகி விலகி போகும் தோனியை சீண்டிய முன்னாள் வீரர்.. என்ன சொன்னார்?

Recommended Video

Gambhir criticize Dhoni | தோனியை சீண்டிய கம்பீர்.. என்ன சொன்னார்?-வீடியோ

டெல்லி : இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் தோனியை சீண்டும் வகையில் பேசி உள்ளார் கௌதம் கம்பீர்.

தோனி ஓய்வு பற்றியும், தோனி எப்போது இந்திய அணியில் மீண்டும் ஆடுவார் என்பது பற்றியும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அது குறித்து முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அப்போது தோனி ஓய்வு பற்றி குறிப்பிட்ட அவர், அவரை சீண்டும் வகையிலும் பேசினார்.

தோனி விடுப்பு

தோனி விடுப்பு

தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் தொடர்ந்து விடுப்பில் இருக்கிறார். ஓய்வு அறிவிக்காமல், இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். நவம்பர் மாதம் வரை தோனி அணியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

மீண்டும் தோனி

மீண்டும் தோனி

தோனி மீண்டும் டிசம்பரில் இந்திய அணியில் இணைந்து விளையாட உள்ளார் என கூறப்படுகிறது. அவருக்கு காயம் இருப்பதாகவும், அதனால் தான் அவர் ஓய்வில் இருக்கிறார் என்றும் ஒரு தகவல் பிசிசிஐ வட்டாரத்தில் வலம் வருகிறது.

கம்பீர் பதில்

கம்பீர் பதில்

தோனி ஓய்வு குறித்து கம்பீரிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஓய்வு என்பது தனிப்பட்ட மனிதரின் முடிவு. தேர்வுக் குழு தோனியிடம் பேச வேண்டும். அவரது எதிர்காலம் திட்டம் என்ன என்பது பற்றி கேட்க வேண்டும் என்றார்.

அதிரடி விமர்சனம்

அதிரடி விமர்சனம்

அடுத்து பேசிய அவர், இந்திய அணிக்காக ஆடும் போது, உங்கள் விருப்பத்துக்கு தொடர்களை தேர்வு செய்து ஆடக் கூடாது என தோனி விடுப்பு எடுத்து வருவது பற்றி விமர்சித்துப் பேசினார்.

ரிஷப் பண்ட் குறித்து..

ரிஷப் பண்ட் குறித்து..

ரிஷப் பண்ட் குறித்தும் பேசிய கம்பீர், அவரை அவர் போக்கில் ஆட விட்டால் தான் சரியாக ஆடுவார். அவர் மீது அளவுக்கு அதிகமான கவனம் இருப்பதாக கூறினார் கௌதம் கம்பீர்.

Story first published: Saturday, September 28, 2019, 12:07 [IST]
Other articles published on Sep 28, 2019
English summary
Gautam Gambhir slams Dhoni on picking and choosing series. Dhoni is currrently under rest after World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X