For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"மொக்கையா வந்து.. பக்காவா திரும்பும் மேக்ஸ்வெல்".. பாலூட்டி, சீராட்டி T20 WCக்கு அனுப்பும் ஐபிஎல்

அமீரகம்: கிளென் மேக்ஸ்வெல் ஃபார்முக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலிய அணியை "ஹப்பாடா" என்று சற்று நிம்மதியடையச் செய்துள்ளது.

Recommended Video

Glenn Maxwell explodes as RCB win by 7 wickets | RR VS RCB |Oneindia Tamil

டி20 உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 17ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இப்போது ஐபிஎல் போட்டிகளும் இதே அமீரகத்தில் தான் நடந்து வருகின்றது.

'சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 'தலை’களின் ஆட்டம்!'சூப்பர் சண்டே’.. ரசிகர்களுக்கு இன்று செம விருந்து.. புள்ளிப்பட்டியலை மாற்றும் 3 'தலை’களின் ஆட்டம்!

இதில், ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள மேக்ஸ்வெல், மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 12 போட்டிகள்

12 போட்டிகள்

அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

 டெத் பிரிவு

டெத் பிரிவு

குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள குரூப்-1 டெத் பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இதில், மோதும் நான்கு அணிகளும் மெகா பலம் வாய்ந்த அணிகள் தான். ஒவ்வொன்றும் மற்ற அணிகளுக்கு சளைத்ததல்ல.

 பலமான அணியா?

பலமான அணியா?

உலகக் கோப்பை டி20க்கான ஆஸ்திரேலிய அணியில், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்க்லிஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

 கவலையில் ஆஸி., நிர்வாகம்

கவலையில் ஆஸி., நிர்வாகம்

இப்போதுள்ள நிலவரப்படி, டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஃபார்ம் பெரியளவில் இல்லை. சமீபத்தில், வங்கதேசத்தில் அந்த அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்று இழந்தது நினைவிருக்கலாம். உலகக் கோப்பை டி20 அணியின் கேப்டன் ஃபின்ச், ஐபிஎல் தொடரிலேயே விளையாடவில்லை. விளையாடிய டேவிட் வார்னர் மோசமான ஃபார்ம் காரணமாக, ஹைதராபாத் அணியில் இருந்தே நீக்கப்பட்டுவிட்டார். டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித்துக்கு இப்போதுதான் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும், சொல்லிக் கொள்ளும்படி ஒரு அதிரடியான இன்னிங்ஸை அவர் ஆடவில்லை. ஸ்டாய்னிஸ் இப்போது காயம் காரணமாக விளையாடவில்லை. ஹேசில்வுட் பந்துவீச்சில் தாக்கம் இல்லை. ஐபிஎல்-ல் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்களின் நிலை இப்படி பல்லிளித்துக் கொண்டிருக்க, அமீரகத்திற்கு சென்று என்ன செய்யப் போகிறோமே கையைப் பிசைந்து கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்.

 சரியான நேரத்தில்

சரியான நேரத்தில்

இந்த சூழலில் தான், பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள மேக்ஸ்வெல்லின் ஆட்டம் கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தனது ஆல் ரவுண்டர் எபிலிட்டியை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 10, 11, 56, 50. ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் லெக்கில் பெங்களூரு இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில், மேக்ஸ்வெல் அடித்துள்ள ஸ்கோர்ஸ் இவை. இதில், மும்பைக்கு எதிராக 56 ரன்கள் அடித்ததுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்துக்கு மேக்ஸ்வெல்லின் இந்த ஃபார்ம் நிச்சயம் பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் என்று பவுலிங் யூனிட் பலமாக இருந்தாலும், பேட்டிங் யூனிட் அதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது. அதில், விதிவிலக்காக மேக்ஸ்வெல் தான் இழந்த ஃபார்மை சரியான நேரத்தில் ஐபிஎல் தொடரில் மீட்டு கொண்டுவந்திருக்கிறார்.

Story first published: Thursday, September 30, 2021, 20:07 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
glenn maxwell back to his terrific form ipl 2021 - ஐபிஎல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X