For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'டக்'குன்னு சுதாரிக்காம விட்டுட்டோம்.. பிராவோ வருத்தம்

ஹைதராபாத்: அடுத்தடுத்து 3 அடியை வாங்கி குஜராத் லயன்ஸ் வாட்டத்தில் உள்ளது. இந்தத் தோல்வி குறித்து அந்த அணியின் ஆல் ரவுண்டர் வேயன் பிராவோ கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக சுதாரிக்காமல் மெத்தனமாக இருந்ததே இந்த நிலைக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

சூழலுக்கேற்ப தனது அணியினர் மாறாமல் விட்டதுதான் தோல்விகளுக்குக் காரணம் என்றும் பிராவோ கூறியுள்ளார். நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் தோற்றது நினைவிருக்கலாம்.

நச் பவுலிங்

நச் பவுலிங்

இதுகுறித்து பிராவோ கூறுகையில், ஹைதராபாத் பந்து வீச்சு மிக மிக நன்றாக இருந்தது. கண்டிப்பாக புவனேஷ் குமார் பாராட்டியே ஆக வேண்டும்.

சிறந்த பவுலர் புவனேஷ்

சிறந்த பவுலர் புவனேஷ்

புவனேஷ் குமார் உலகின் சிறந்த ஸ்விங் பவுலர்களில் ஒருவர். அவர் சரியான முறையில் பந்து வீச ஆரம்பித்து விட்டால் பேட் செய்வது கடினமாகி விடும்.

ஆசிஷ் நேஹ்ரா வேற

ஆசிஷ் நேஹ்ரா வேற

கூடவே ஆசிஷ் நேஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினார். இப்படிப்பட்ட சூழலில் ரன்களை எடுப்பது என்பது கடினமானது. ஆனால் நாங்கள் சூழலுக்கேற்ப சுதாரித்திருக்க வேண்டும் என்றார் பிராவோ.

சகஜம்தான்

சகஜம்தான்

அதேசமயம், இதுபோல நடப்பது எல்லா பெரிய அணிகளுக்கும் சகஜம்தான் என்றும் பிராவோ கூறினார்.

Story first published: Saturday, May 7, 2016, 16:43 [IST]
Other articles published on May 7, 2016
English summary
Disappointed after three back-to-back losses, Gujarat Lions' all-rounder Dwayne Bravo said his team has lacked in adapting to different conditions which has led to the current downward spiral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X