For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: புக்கிகளுக்கு தகவலை லீக் செய்து, பெரும் தொகையை பெட் கட்டிய மெய்யப்பன்

By Siva

டெல்லி: ஐபிஎல் 6வது சீசனின்போது சென்னை சூப்பர் கிங் அணியின் தலைவரான குருநாத் மெய்யப்பன் அணி குறித்த விவரங்களை புக்கிகளுக்கு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மெய்யப்பன்

மெய்யப்பன்

விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரிய வந்துள்ளது. அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகைகளை பெட் கட்டியுள்ளார்.

தொடர்பு

தொடர்பு

மெய்யப்பன் 9677219984 என்ற செல்போன் நம்பர் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.

ஐபிஎல் 6

ஐபிஎல் 6

மெய்யப்பன் ஐபிஎல் 6வது சீசனின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் விளையாடிய போட்டிகளின்போது பெரும் தொகையை பெட் கட்டியுள்ளார். அவர் வின்டு மூலமாக தான் பெட் கட்டியுள்ளார்.

போட்டி முடிவு

போட்டி முடிவு

வின்டுவுடன் சேர்ந்து மெய்யப்பன் போட்டி முடிவுகளை கணித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 12ம் தேதி அவர் வின்டுவுடன் பேசுகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த தகவலை அளித்துள்ளார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி குறித்த தகவலையும் மெய்யப்பன் வின்டுவிடம் தெரிவித்துள்ளார்.

130 டூ 140 ரன்கள் எடுப்பார்கள்

130 டூ 140 ரன்கள் எடுப்பார்கள்

சென்னை அணி 130 முதல் 140 ரன்கள் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

யார் யார் எந்த வரிசையில் விளையாடுவார்கள்...

யார் யார் எந்த வரிசையில் விளையாடுவார்கள்...

மேலும் மே 14ம் தேதி போட்டியின்போது சென்னை அணியில் யார் யார் எந்தெந்த வரிசையில் விளையாட வருவார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளார்.

Story first published: Friday, February 21, 2014, 13:05 [IST]
Other articles published on Feb 21, 2014
English summary
The team that investigates IPL scam found out that Gurunath Meiyappan, son-in-law of BCCI boss N Srinivasan, had bet large amounts of money through Vindu Dara Singh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X