For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மக்கள் உயிர் போனா பரவாயில்லையா? ஹர்பஜன் சிங்கின் கொரோனா வேக்ஸின் பதிவு.. கொந்தளித்த ரசிகர்கள்!

மும்பை : இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் வேக்ஸின் தேவையா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

அவரது இந்த சர்ச்சை பதிவை கண்டு ரசிகர்கள் பலர் கொந்தளித்து இருக்கிறார்கள். இறந்து போகும் மக்களை பற்றியே அவர் மறந்து விட்டதை குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் சொல்லும் கணக்கு தவறாக இருப்பதையும் சுட்டிக் காட்டி அவரை விமர்சனம் செய்துள்ளனர்.

ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்.. இந்திய வீரர் சொன்ன அந்த வார்த்தை.. உருகிய ஆஸி. வீரர்!ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்.. இந்திய வீரர் சொன்ன அந்த வார்த்தை.. உருகிய ஆஸி. வீரர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 95 லட்சத்தை கடந்துள்ளது. இந்த வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,38,000த்தை கடந்துள்ளது. முன்பை விட வைரஸ் பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

வேக்ஸின்

வேக்ஸின்

எனினும், மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. மக்கள் இடையே கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வேக்ஸின் கிடைத்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். பலி எண்ணிக்கையையும் தடுத்து நிறுத்த முடியும்.

மருந்து கண்டுபிடிப்பு

மருந்து கண்டுபிடிப்பு

தற்போது உலகம் முழுவதிலும் சில நாடுகளில் கொரோனா வைரஸுக்கு எதிரான வேக்ஸின் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த மருந்துகள் இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு தேவையா?

இந்தியாவுக்கு தேவையா?

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேக்ஸின் மருந்து இந்தியாவுக்கு தேவையா? என கேள்வி எழுப்பி அதிர வைத்துள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் முதலில் கேட்கும் போது சரியானதாக சிலருக்கு தோன்றினாலும், சிந்தித்துப் பார்த்தால் அது தவறு என புரியும்.

பலன்

பலன்

ஹர்பஜன் சிங் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேக்ஸின் மருந்துகள் எத்தனை சதவீதம் பலன் அளித்துள்ளது என்பதை இந்தியாவில் பாதிக்கப்பட்டு குணமடையும் மக்களின் சதவீதத்துடன் ஒப்பிட்டுள்ளார். இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என அவர் கூறி உள்ளார்.

ஒப்பீடு

ஒப்பீடு

பிபைசர் வேக்ஸின் 94 சதவீதம், மாடர்னா வேக்ஸின் 94.5 சதவீதம், ஆக்ஸ்போர்டு வேக்ஸின் 90 சதவீதம் மட்டுமே பலன் அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில் மருந்தே இல்லாமல் குணமடைவோர் விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

இதை குறிப்பிட்டே ஹர்பஜன் சிங் இந்தியாவுக்கு வேக்ஸின் தேவையா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதை ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் 6.4 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்து போகிறார்கள். அவர்களுக்கு மருந்து வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

விளாசல்

விளாசல்

இந்தியாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1,38,000த்தை கடந்துள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கவே செய்யும். மருந்து கிடைத்தால் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். இது புரியாமல் ஹர்பஜன் சிங் கருத்து கூறி உள்ளதாக ரசிகர்கள் அவரை விளாசி உள்ளனர்.

Story first published: Thursday, December 3, 2020, 18:12 [IST]
Other articles published on Dec 3, 2020
English summary
Harbhajan Singh comment on vaccine unwelcomed by fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X