For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 3 விஷயமும் மறக்கவே முடியாது.. ரொம்ப ஸ்பெஷல் - ஹர்பஜன் சிங்!

சண்டிகர் : இந்திய அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங், இந்திய அணியின் பல்வேறு மறக்க முடியாத வெற்றிகளில் பங்கேற்றுள்ளார்.

அது குறித்து பேசிய போது அவர் மூன்று வெற்றிகளை தன் கிரிக்கெட் வாழ்வில் சிறப்பானதாக குறிப்பிட்டார்.

அதில் முதலாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2001 டெஸ்ட் தொடர்.

அவங்க 2 பேரும் மறுபடியும் டீமுக்கு வந்துட்டாங்க.. விராட் கோலிக்கு மறைமுக வார்னிங் தந்த டிராவிட்!அவங்க 2 பேரும் மறுபடியும் டீமுக்கு வந்துட்டாங்க.. விராட் கோலிக்கு மறைமுக வார்னிங் தந்த டிராவிட்!

முக்கிய பங்கு

முக்கிய பங்கு

ஆம், அந்த டெஸ்ட் தொடர் தான் அவரது கிரிக்கெட் வாழ்வை மாற்றி அமைத்தது. ஹர்பஜன் சிங் அந்த தொடரை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக கொல்கத்தா டெஸ்டில் பெற்ற வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் தான் ஹர்பஜன் சிங் தன் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். அடுத்ததாக 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றியை குறிப்பிட்டார். மூன்றவதாக 2007 டி20 உலகக்கோப்பை வெற்றியை குறிப்பிட்டார்.

முதல் இடத்தில்..

முதல் இடத்தில்..

ஹர்பஜன் சிங் கூறியதாவது - "ஒரு வீரராக நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2001 டெஸ்ட் தொடரை முதல் இடத்தில் வைப்பேன். அது தான் நான் இன்று ஒரு வீரராக இருக்கும் நிலைக்கு காரணம். என் சிறு வயது கனவை எடுத்துக் கொண்டால், நான் எப்போதும் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என நினைத்தேன்"

நம்ப முடியாத வெற்றி

நம்ப முடியாத வெற்றி

"2011இல் அது உண்மை ஆனது. அதனால், அதை 2001 தொடர் வெற்றிக்கு இணையாக நான் கருதுவேன். அடுத்து 2007 உலகக்கோப்பை வெற்றி நம்ப முடியாதது. நாங்கள் இந்தியா திரும்பிய போது மிகப் பெரிய ஆதரவை பெற்றோம்."

மிகவும் சிறப்பானவை

மிகவும் சிறப்பானவை

"அதற்கு முன்பு நான் அப்படி எதையும் பார்த்ததே இல்லை. இந்த மூன்று தருணங்களையும் என்னால் பட்டியல் இட முடியாது. மூன்றுமே எனக்கு மிகவும் சிறப்பானவை தான்" என குறிப்பிட்டு முடித்தார் ஹர்பஜன் சிங். இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த சில வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 11, 2020, 19:57 [IST]
Other articles published on Jun 11, 2020
English summary
Harbhajan Singh revealed three special moments in his cricket life. He included 2011 and 2007 World Cup victories in the list along with 2001 Australia test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X