For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேம் பினிஷிங் வித்தை... தோனிகிட்ட இருந்து பாண்டியா கத்துக்கிட்டிருக்காரு... ஷேவாக் பாராட்டு

டெல்லி : இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பான கேம் பினிஷராக உருவாகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் இவரது செயல்பாடு சிறப்பாக காணப்பட்டது.

இங்கிலாந்து -இந்திய தொடர்... நிறைய இடத்துல நடக்குதாம்... பிசிசிஐ அதிரடி வியூகம் இங்கிலாந்து -இந்திய தொடர்... நிறைய இடத்துல நடக்குதாம்... பிசிசிஐ அதிரடி வியூகம்

இந்நிலையில் முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்து பாண்டியா கேம் பினிஷிங் வித்தையை கற்றுள்ளதாக முன்னாள் வீரர் ஷேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாண்டியா அபாரம்

பாண்டியா அபாரம்

ஹர்திக் பாண்டியா சிறப்பான கேம் பினிஷராக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அவரது ஆட்டங்கள் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன. அதற்கு ஏற்றாற்போல கடந்த 5 போட்டிகளில் அவரது ஆட்டம் அமைந்தது. குறிப்பாக கடந்த டி20 தொடரின் 2வது போட்டியில் 22 பந்துகளுக்கு 40க்கும் மேல் ரன்களை குவித்த பாண்டியா, இறுதி ஓவரில் 2 சிக்ஸ்களையும் அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.

அனைவரும் பாராட்டு

அனைவரும் பாராட்டு

போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி இந்த தொடரில் தனது பௌலிங்கையும் மீண்டும் துவக்கி முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தினார் பாண்டியா. அவரது ஆட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஷேவாக் பாராட்டு

ஷேவாக் பாராட்டு

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் ஹர்திக் பாண்டியா மிகவும் வியப்பான வீரர் என்று கூறியுள்ளார். சோனி நெட்வொர்க்கிற்காக பேசிய ஷேவாக், சிறப்பான கேம் பினிஷராக மாறியுள்ள பாண்டியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தோனியிடம் பாடம்

தோனியிடம் பாடம்

மேலும் முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு பாண்டியாவிற்கு கிடைத்த நிலையில், ஒரு போட்டியை எவ்வாறு முடித்து கொடுப்பது மற்றும் எவ்வாறு போட்டியை இறுதிவரை கொண்டு செல்வது என்பது குறித்து அவர் தோனியிடம் அறிந்துள்ளதாகவும் ஷேவாக் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 8, 2020, 13:41 [IST]
Other articles published on Dec 8, 2020
English summary
Virender Sehwag said Hardik Pandya is an amazing player
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X