For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாழ்வா? சாவா? போட்டியில் ரிஸ்க்.. டாஸில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவு.. இந்திய அணி ஜெயிக்குமா??

அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் அட்டகாசமான முடிவை எடுத்த பாண்ட்யா, டாஸில் ரிஸ்க்கான முடிவை கையில் எடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1 -1 என சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆனால் அவர் செய்த முடிவுக்கும், பிட்ச்-ல் உள்ள தன்மைக்கும் மாறுபாடுகள் உள்ளன.

இந்தியாவை வீழ்த்த இந்திய வீரரே ஆயுதமாகிறார்.. ஆஸ்திரேலியா போட்ட மெகா ப்ளான்.. பாட்சா பலிக்குமா?? இந்தியாவை வீழ்த்த இந்திய வீரரே ஆயுதமாகிறார்.. ஆஸ்திரேலியா போட்ட மெகா ப்ளான்.. பாட்சா பலிக்குமா??

பிட்ச்-ன் நிலைமை

பிட்ச்-ன் நிலைமை

நரேந்திர மோடி மைதானத்தில் பெரிய பவுண்டரி எல்லைகள் உள்ளன. இங்கு பேட்ஸ்மேன்களுக்கு நல்ல களமாக இருக்கும். இதே போல ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் என இரண்டிற்குமே சம அளவில் சப்போர்ட் இருக்கும். எனினும் 2வது இன்னிங்ஸின் போது அதிகப்படியான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசி விடுவது தான் நல்லதாக கூறப்பட்டது. ஆனால் பாண்ட்யாவோ பேட்டிங்கை எடுத்துள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுகுறித்து பேசிய அவர், இந்த பிட்ச் நன்றாக உள்ளதால் முதலில் நிறைய ரன்களை குவித்துவிட்டு, அங்கிருந்து ஆட்டத்தை எடுத்து செல்ல விரும்புகிறோம். இங்கு தான் ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடினோம். 2வது இன்னிங்ஸில் பந்து கொஞ்சம் நன்றாக செயல்படும். எனவே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ஒரே ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் 4 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் இந்த போட்டியில் யுவேந்திர சாஹல் நீக்கப்பட்டு, மீண்டும் உம்ரான் மாலிக் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்னும் 7 பவுலர்கள் செயல்படவுள்ளனர். சுப்மன் கில்லுக்கு மாற்றாக பிரித்வி ஷா கொண்டு வரப்படுவார் என எதிர்பார்த்த சூழலில் ஏமாற்றமே மிஞ்சியது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

சுப்மன் கில், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்

Story first published: Wednesday, February 1, 2023, 19:05 [IST]
Other articles published on Feb 1, 2023
English summary
Captain Hardik pandya takes huge risk on toss of India vs New Zealand 3rd T20 match, here is the reason behind it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X