எனக்கே கோஹ்லிதான் ரோல்மாடல்.. போங்க பாஸ்.. ஸ்டீவ் ஸ்மித்தே சொல்லிட்டார்!

Posted By:
கோஹ்லியின் ஆட்ட திறமைகளை வர்ணித்த ஸ்டீவ் ஸ்மித்- வீடியோ

சிட்னி: கோஹ்லியிடம் இருந்து கிரிக்கெட் யுக்திகள் நிறைய கற்றுக்கொண்டதாக ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்து இருக்கிறார். வானத்தை பற்றி பூமி பேசியது போல இவரது பேட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர் கோஹ்லியின் ஆட்ட திறமைகளை வர்ணித்து பேசி இருக்கிறார். அதே போல் மற்ற நாட்டு வீரர்களின் ஆட்ட திறமையையும் வர்ணித்து இருக்கிறார்.

அதன்படி தனக்கு டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் கோஹ்லி, ஸ்மித் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சிறந்தவர்கள்

சிறந்தவர்கள்

கோஹ்லி எப்படி உலகின் சிறந்த வீரர் என்ற பெயரை பெற்று இருக்கிறாரோ அதேபோல் இன்னும் சில வீரர்கள் இருக்கிறார்கள். டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன், அம்லா ஆகியோர் கோஹ்லிக்கு நிகராக மதிக்கப்பட இருக்கிறார்கள். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் இந்த லிஸ்டில் கோஹ்லிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

செட் ஆகாது

செட் ஆகாது

ஆனால் இதில் கோஹ்லிக்கு டிவில்லியர்ஸுக்கு நல்ல நட்பு இருக்கிறது. மேலும் கேன் வில்லியம்ஸ் உடன் பெரிய பகை ஏற்படும் அளவிற்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஸ்டீவ் ஸ்மித்துடன் கோஹ்லி மோசமாக சண்டையிட்டு இருக்கிறார். இருவரும் ஒரே குணம் என்பதால் அடிக்கடி சண்டை வரும்.

என்னமோ இருக்கு

என்னமோ இருக்கு

தற்போது கோஹ்லி பற்றி ஸ்டீவ் ஸ்மித் ''கோஹ்லி மிகவும் சிறந்த வீரர். அவர் சிறந்த வீரராக இருக்க காரணம் இருக்கிறது. எங்களிடம் இல்லாத சிறப்பம்சம் அவரிடம் எதோ இருக்கிறது. அதுதான் அவரை முதன்மையான வீரராக வைத்து இருக்கிறது'' என்றுள்ளார்.

சூப்பர்

சூப்பர்

மேலும் ''கோஹ்லியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதில் எனக்கு வெட்கமே இல்லை. அவரும் எனக்கு ஒரு ரோல்மாடல் தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, February 23, 2018, 13:38 [IST]
Other articles published on Feb 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற