பிராட்மேனை முந்தியவர் ஐபிஎல்லால் கோடீஸ்வரரானார்

Posted By: Staff

பெங்களூரு: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியைச் சேர்ந்த நான்கு பேர், ஐபிஎல் போட்டிக்காக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசனுக்கான வீரர்களை ஏலம் எடுப்பது பெங்களூரில் நடந்தது. இதில் போட்டி போட்டு ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலம் எடுத்தன.

இதில், நியூசிலாந்தில் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடும் நான்கு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

Heavy price for juniors

இதில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் ஷப்னம் கில். இவர் ஒருதினப் போட்டியில், ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்தவர்களில் அதிக பேட்டிங் சராசரியுடன் உள்ளார்.

13 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்து, 101.60 பேட்டிங் சராசரியுடன் உள்ளார். இது பிராட்மேன் சாதனையைவிட அதிகமாகும். அதே போல் விரைவாக ஆயிரம் ரன்கள் சேர்த்த பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார்.

19 வயதுக்குட்பட்டோர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோடியை ரூ.3.2 கோடி ரூபாய்க்கு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. அடிப்படை விலை ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட இந்த இளம் வீரர்களில் மிக அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர் நாகர்கோடி.

இளம் ரன் மெஷினான ஜூனியர் அணியின் கேப்டன் பிருத்வி ஷா மற்றும் முன்னாள் கேப்டன் இஷான் கிஷணும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான கிஷணை ரூ.6.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

பிருத்வி ஷாவை ரூ.1.2 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் ஏலம் எடுத்துள்ளது.


Story first published: Monday, January 29, 2018, 15:54 [IST]
Other articles published on Jan 29, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற