For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசஸ் தொடருக்கு பிறகு மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் தொடர் என்றால் அது பார்டர் கவாஸ்கர் கோப்பை தான்.

இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் இந்த தொடரை இரு நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான்களின் பெயரை வைத்து தொடர் மாற்றப்பட்டது.

இந்த தொடர் 1996 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பு வெறும் இருதரப்பு தொடராக எவ்வித பெயரும் இன்றி 1947 முதல் 92 வரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதி இருக்கிறது.

இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

அதன் பிறகு 96 ஆம் ஆண்டு முதல் தான் பார்டர் கவாஸ்கர் கோப்பை ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தொடரில் அதிகபட்சமாக 3262 ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். இதேபோன்று நட்சத்திர வீரர் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.

அதிக வெற்றி

அதிக வெற்றி

பார்டர் கவாஸ்கர் கோப்பையை அதிகபட்சமாக இந்திய அணி 10 முறை கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி வெறும் ஐந்து முறை தான் இந்த கோப்பையை வென்றிருக்கிறது. இதுவரை மொத்தமாக 52 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணி 22 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 19 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

 18 ஆண்டுகள்

18 ஆண்டுகள்

பார்டர் கவாஸ்கர் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போது கடந்த இரண்டு முறையும் இந்திய அணி தொடரை வென்று அசத்தியிருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு தான் வென்றது.இதனால் 18 ஆண்டுகளாக இந்திய மண்ணில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை அந்த அணி கைப்பற்ற செய்த முயற்சி தோல்வியை தழுவி இருக்கிறது.

யாருக்கு முக்கியம்

யாருக்கு முக்கியம்

இந்தத் தொடரில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார். அவர் நான்கு சதம் அடித்துள்ளார். இந்திய மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தகுதி பெற வேண்டும் என்றால் இரண்டு போட்டியில் குறைந்தபட்சம் மூன்று போட்டியில் ஆவது வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய அணியும் உள்ளதால் இந்த தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 5, 2023, 10:13 [IST]
Other articles published on Feb 5, 2023
English summary
Here is the stats of border gavaskar trophy - who won the title mostபார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X