For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜாகீர் கானை விஞ்சும் இஷாந்த்.. காத்திருக்கும் புதிய சிம்மாசனம் - இந்தியாவின் "பொக்கிஷம்"

ஹெட்டிங்லே: இந்தியா உற்பத்தி செய்த மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் மற்றும் ஜாகீர் கானின் ஒப்பீட்டை இங்கு பார்க்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று (ஆக.25) தொடங்கவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த போட்டி தொடங்கவிருக்கிறது.

இந்த முறையும் அஷ்வினுக்கு வாய்ப்பில்லை.. என்னதான் நினைக்கிறார் கோலி? - பிளேயிங் லெவன் இந்த முறையும் அஷ்வினுக்கு வாய்ப்பில்லை.. என்னதான் நினைக்கிறார் கோலி? - பிளேயிங் லெவன்

காரணம், இத்தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

சைலன்ட் கில்லர்

சைலன்ட் கில்லர்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில், இஷாந்த் ஷர்மா ஒரு அட்டகாசமான சாதனையை படைக்கவிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் அவர் இரண்டாமிடம் பெறவிருக்கிறார். இவரை சைலன்ட் கில்லர் எனலாம். பெரிய அளவில் ஆர்ப்பாட்டமின்றி சப்தம் போடாமல் இந்த சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்.

இஷாந்த் டெஸ்ட் சாதனை

இஷாந்த் டெஸ்ட் சாதனை

இஷாந்த் 2007ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக ஷெரே பங்களா ஸ்டேடியத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

14 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் விளையாடி வரும் இஷாந்த் ஷர்மா, 300 க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

நீண்டகால டெஸ்ட் வாழ்க்கையில், இஷாந்த் 103 போட்டிகளில், 32.19 எனும் ஆவரேஜுடன் மொத்தம் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதில், 11 முறை ஐந்து விக்கெட்டுகளையும், ஒருமுறை 10 விக்கெட்டுகளையும் (10/108) வீழ்த்தி இருக்கிறார்.

ஜாகீர் கான் டெஸ்ட் சாதனை

ஜாகீர் கான் டெஸ்ட் சாதனை

இந்தியாவின் மிகச் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று கண்களை மூடிக் கொண்டு ஜாகீர் கான் பெயரை சொல்லிவிடலாம்.

தனது கிரிக்கெட் வாழக்கையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் கண்டு அஞ்சும் பவுலராக வலம் வந்த பெருமைக்குரியவர் ஜாகீர். இவரது ஸ்பின் பந்துவீச்சுகள் பல பேட்ஸ்மேன்கள் ஆஃப், மிடில், லெக் ஸ்டெம்ப்புகளை மாறி மாறி பறக்க வைத்தவர்.

ஜாகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 32.94 ஆவரேஜுடன் 311 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இஷாந்தைப் போலவே, ஐவரும் 11 முறை ஐந்து விக்கெட்டுகளையும் ஒருமுறை 10 விக்கெட்டுகளையும் பதிவு செய்துள்ளார்.

வெளிநாடுகளில் இஷாந்த், ஜாகீர்

வெளிநாடுகளில் இஷாந்த், ஜாகீர்

வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது பவுலர் ஜாகீர் தான்.

அவர் 54 டெஸ்ட் போட்டிகளில் 31.47 ஆவரேஜுடன் (8 முறை ஐந்து-விக்கெட்டுகள்) 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இஷாந்த் 204 விக்கெட்டுகளுடன் ஜாகீருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

இஷாந்த், வெளிநாடுகளில் ஜாகீரை விட, ஒன்று அதிகமாக.. அதாவது, 9 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அனில் கும்ப்ளே (269) மற்றும் கபில் தேவ் (215).

இஷாந்த், ஜாகீர் சாதனைகள்

இஷாந்த், ஜாகீர் சாதனைகள்

பல ஆண்டுகளாக, இங்கிலாந்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலர் எனும் பெருமையும், பெயரும் இஷாந்த் ஷர்மா வசமே உள்ளது.

சமீபத்தில் தான் கபில் தேவின் இங்கிலாந்து சாதனையை இஷாந்த் முறியடித்தார்.

இங்கிலாந்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் மட்டுமே.

ஜாகீர் கான் மிகக் குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதாவது 89 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை பதிவு செய்த பெருமையும் ஜாகீருக்கு உண்டு.

இந்தியாவில் சரிசம விக்கெட்டுகள்

இந்தியாவில் சரிசம விக்கெட்டுகள்

சுவாரஸ்யமாக, இஷாந்த் மற்றும் ஜாகீர் இருவரும் இந்திய மண்ணில் சரிசம அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இஷாந்த் 31.11 ஆவரேஜுடன் 41 டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், ஜாகீர் கான் சொந்த மண்ணில் 38 டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

வெற்றியில் பங்களிப்பு

வெற்றியில் பங்களிப்பு

சில மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகளை ஸ்கிரிப்ட் செய்ய இந்திய அணிக்கு இஷாந்த் உதவி இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டில் லார்ட்ஸில் இந்தியா பெற்ற அபார வெற்றி இதற்கு ஒரு சான்று.

இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில், அதாவது 48 டெஸ்ட் போட்டிகளில் 24.41 என்ற சராசரியில் 158 விக்கெட்டுகளை இஷாந்த் வீழ்த்தியுள்ளார்.

இஷாந்த் ஷர்மா இருந்த போதே, ஜாகீர் கானும் இந்திய அணியின் மேட்ச் வின்னராக பல போட்டிகளில் பங்காற்றியுள்ளார்.

இந்திய வெற்றிப் பெற்ற போட்டிகளில், அதாவது 38 ஆட்டங்களில் ஜாகீர் கானின் மகத்தான பங்கு இருந்திருக்கிறது. எனினும், இந்த வெற்றிப் பெற்ற மேட்சுகளின் விக்கெட் எண்ணிக்கையில், இஷாந்தை விட அவர் ஒன்பது விக்கெட்டுகள் குறைவாக வைத்திருக்கிறார்.

நம்பர்.1 பவுலர்

நம்பர்.1 பவுலர்

ஒட்டுமொத்தமாக பார்த்தோமெனில், ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா என இருவரும் இந்திய அணிக்காக பெரும் பங்காற்றியுள்ளனர். ஒரு வேகப்பந்து வீச்சாளராக 300 விக்கெட்டுகளை வீழ்த்துவது, 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது என்பது மகத்தான சாதனையாகும். இதற்கு நல்ல உடற்தகுதி, ஃபார்ம் என்று அனைத்துமே, எப்போதுமே இருக்க வேண்டும். அப்படியொரு வீரராக இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் இஷாந்த் ஷர்மா. இன்று இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் இஷாந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர் 312வது விக்கெட்டை வீழ்த்தும் போது, இந்தியாவின் நம்பர்.2 வேகப்பந்துவீச்சாளர் எனும் அரியணையில் அமருவார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இஷாந்த்!

Story first published: Wednesday, August 25, 2021, 15:15 [IST]
Other articles published on Aug 25, 2021
English summary
comparison of ishant sharma and zaheer khan - இஷாந்த் ஷர்மா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X