For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்!

மும்பை: வரும் காலங்களில் தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை பார்க்க விரும்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருவது சர்வதேச அளவில் ஏராளமானோரை ஈர்த்துள்ளது. நடப்பாண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார், 1164 ரன்கள் குவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டிலேயே ஒருநாள் கிரிக்கெட்டுக்கான சராசரியை வைத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் விரைவில் தொடங்க உள்ள 6 அணிகளுக்கான டி20 லீக் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

தப்பி பிழைத்த பாகிஸ்தான்..சூடு பிடித்த அரையிறுதி பந்தயம்.. தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு நெருக்கடிதப்பி பிழைத்த பாகிஸ்தான்..சூடு பிடித்த அரையிறுதி பந்தயம்.. தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு நெருக்கடி

ஸ்மித் பேச்சு

ஸ்மித் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் டி20 லீக் ஆணையராக உள்ள தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டன் ஸ்மித் பங்கேற்றார். அப்போது ஸ்மித் பேசுகையில், தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்களா என்று கேள்வி வருகிறது. எனக்கும் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் பிசிசிஐ முடிவை மதிக்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றால் மட்டுமே வேறு லீக் போட்டிகளிள் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்கா லீக்கில் விளையாட வேண்டும் என்றால், அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும். சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவாரா என்று கிண்டலாக தெரிவித்தார் . இந்திய வீரர்கள் பற்றிய முடிவை பிசிசிஐ ஏற்கனவே எடுத்துள்ளது. வரும் காலங்களில் மாற்றம் வந்தால், தென்னாப்பிரிக்காவிலும் இந்திய வீரர்களின் திறமையை பார்க்க முடியும். ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

திறமைகளுக்கு பஞ்சமா?

திறமைகளுக்கு பஞ்சமா?

தொடர்ந்து டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெளியேறியது பற்றிய கேள்விக்கு, டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் கடைசி போட்டியில் ரசிகர்கள் ஏமாற்றிவிட்டோம். இந்த டி20 லீக் தொடங்கப்படுவதற்கான காரணம் புதிய திறமைகளை கண்டறிவதற்காக தான். ஐபிஎல் மூலம் இந்திய அணியில் திறமைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

டெம்பா பவுமா

டெம்பா பவுமா

25க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டியிட்டு வருகின்றனர். யாரை தேர்வு செய்வது என்பது தேர்வுக்குழுவினருக்கு கடினமாக உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து டெம்பா பவுமா டி20 லீக்கில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, 6 அணிகளின் உரிமையாளர்களுமே இந்தியர்கள் தான். டி20 கிரிக்கெட்டில் அதிரடி விளையாட்டு வீரர்கள் மட்டுமே அணி உரிமையாளர்கள் விரும்புகிறார்கள். பவுமா ஏலத்தில் வாங்கப்படாதது எதிர்பாராதது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பவுமா அனைவருக்கும் நிரூபிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Story first published: Saturday, December 3, 2022, 0:42 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Former captain Cream Smith has said that he would like to see Indian players in South Africa T20 league matches in the future.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X