மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க

மும்பை : மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை இன்று ஒரு பொன்னாள் என்று சொல்ல வேண்டும். பல ஆண்டு கனவான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கல்லை பிசிசிஐ இன்று நகர்த்தியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் முதல் சீசனில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.

இதில் பி சி சி ஐ க்கு மொத்தம் 4670 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது ஆடவர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனை விட அதிகம்.

வென்ற அணிகள்

வென்ற அணிகள்

இதில் அதிகபட்சமாக அகமதாபாத் அணியை அதானி நிறுவனம் 1289 கோடி ரூபாய்க்கும் மும்பை அணியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் 912 கோடி ரூபாய்க்கும் பெங்களூர் அணியை ஆர்.சி.பி 901 கோடி ரூபாய்க்கும் டெல்லி அணியை டெல்லி கேப்பிடல்சின் துணை நிறுவனமான ஜே எஸ் டபிள்யூ, 810 கோடி ரூபாய்க்கும், லக்னோ அணியை காப்ரி குளோபல் 757 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் வாங்கியுள்ளது .

ஆர்வம் காட்டாத சிஎஸ்கே

ஆர்வம் காட்டாத சிஎஸ்கே

இதில் ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளாக கருதப்படும் சென்னையும், கொல்கத்தாவும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் வாங்கப்படாதது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மகளிர் ஐ பி எலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எந்த தொகையும் கேட்கவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

 சென்னைக்கு குறி

சென்னைக்கு குறி

எனினும் எஸ் ஆர் ஹச் அணியின் சன் நெட்வொர்க் நிறுவனம் பெங்களூரு, மும்பை மற்றும் சென்னையை மையமாக வைத்து 300 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்தது. அதேபோன்று அப்போலோ பைப்ஸ் நிறுவனம் சென்னை ,லக்னோ, கொல்கத்தா, கௌஹாத்தி ,இந்தூர், தர்மசாலா ஆகிய நகரங்களை மையமாக வைத்து 737 கோடி ரூபாய் கேட்டிருந்தது. இது கேப்ரி குளோபல் நிறுவனம் கேட்டதை விட 20 கோடி ரூபாய் குறைவாகும்.

மிஸ் ஆனது எப்படி

மிஸ் ஆனது எப்படி

இந்த 20 கோடி ரூபாய் மட்டும் அதிகமாக இருந்திருந்தால் இந்நேரம் சென்னை அணி மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாடியிருக்கும். சென்னை அணியை மையமாக வைத்து எட்டு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றும் சென்னை அணி ஏலத்தில் தேர்வாகவில்லை என்பது சோகமான விஷயம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
How Chennai team missed womens premiere league auction மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
Story first published: Wednesday, January 25, 2023, 23:02 [IST]
Other articles published on Jan 25, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X