விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித், பாண்டியா.. மென் இன் ப்ளூ வெற்றி பெற்றது எப்படி!

Posted By:
5வது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று சாதித்த இந்திய அணி

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்று இருக்கிறது. கடைசி போட்டியை மட்டுமா வென்று இருக்கிறது, மொத்த தொடரையும் சோக்காக மடித்து சொக்காவிற்குள் வைத்து இருக்கிறது.

நேற்று இந்திய அணி செய்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனை ஆகும். கபில் தேவ், கங்குலி, டோணி செய்து முடிக்க முடியாததை கோஹ்லி எளிதாக முடித்து இருக்கிறார்.

இந்த 5வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணி மீது பல விமர்சனங்கள் இருந்தது. முக்கியமாகப் பாண்டியா, ரோஹித் மீது அதிக விமர்சனங்கள் இருந்தது.

சாதனை

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இருந்த கரும்புள்ளி இது. என்னதான் நன்றாக ஆடினாலும் ஒரு தொடரை கூட நாம் தென்னாப்பிரிக்க மண்ணில் வென்றது இல்லை. அந்தக் கரும்புள்ளியை ரப்பர் வைத்து அழித்து இருக்கிறது கோஹ்லியின் யூத் படை. எழுதும் போதே வாவ் போட வைக்கிறது மென் இந்த ப்ளூ செய்த சாதனை.

மீண்டு வந்தனர்

மீண்டு வந்தனர்

இதில் பார்மிற்கு திரும்பியதில் முக்கியமானவர் தவான். நான்கு போட்டியிலும் அவர் சிறப்பாகவே ஆடினார். அவுட் ஆன போட்டியில் கூட ரன் அவுட் காரணமாக ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு ஓப்பனராக தான் ஏன் அவசியம் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

ரிஸ்ட் ஸ்பின்

ரிஸ்ட் ஸ்பின்

இந்திய அணியின் சொத்தாக உருவாகி இருக்கும் இரண்டு முத்துக்கள்தான் சாஹல், குல்தீப். எந்த பிட்சாக இருந்தால் பந்து எவ்வளவு வேகத்தில் சென்றாலும் நாங்கள் விக்கெட் எடுப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறது இந்த ஜோடி. வீரம் அஜித் மாதிரி இந்திய அணியைத் தொட வேண்டும் என்றால் இவர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

இருவரும் பதிலடி

இருவரும் பதிலடி

இந்தத் தொடரின் தொடக்கத்தில் இருந்து ரோஹித், பாண்டியா மீது விமர்சனம் இருந்தது. அதை தன்னுடைய செஞ்சுரி மூலம் மீண்டும் தூசி தட்டி இருக்கிறார் ரோஹித். பேட்டிங்கில் டக்கில் சென்றாலும் பாண்டியா பவுலிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். 9 ஓவரில் 30 ரன் மட்டுமே கொடுத்தார். டுமினி, ஏபிடி என்று இரண்டு தென்னாப்பிரிக்க டெவில்களை அவுட் செய்தது இவர்தான்.

சிங்கம்

சிங்கம்

இவ்வளவு பேர் இருந்தாலும் கோஹ்லி கேப்டன்சியும் இதற்கு முழுமுதற்காரணம். அதிகபட்சம் இவர் செய்யும் ஒரே தவறு ரன் அவுட் ஆவது மட்டுமே. எந்த மாதிரி பந்து வந்தாலும் அடிப்பேன் என்று சபதம் எடுத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார். குளித்து விட்டு தலையை துவட்டுவது போல செஞ்சுரி அடிக்கும் கோஹ்லி இருக்கும் வரை இந்திய அணியை யாரும் ஏதும் செய்ய முடியாது.

Story first published: Wednesday, February 14, 2018, 16:12 [IST]
Other articles published on Feb 14, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற