For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. விராட் கோலி கூட செய்யல.. சுழன்று அடித்த ஷாட்டால் ரசிகர்கள் ஆச்சரியம்

மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் மற்ற இந்திய அணி வீரர்கள் தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மட்டும் தனி ஆளாக நின்று அதிரடியாக விளையாடினார்.

சூர்யகுமார், ஏபி டிவில்லியர்ஸ் போல் 360 டிகிரி கோணத்தில் அனைத்து ஷாட்டும் ஆடுகிறார்கள் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று மீண்டும் சங்கு சக்கரம் போல் சுழன்று சூர்யகுமார் யாதவ் அடித்தார்.

இதெல்லாம் ஒரு அவுட்டா??.. அம்பயர்களின் மிக மோசமான முடிவு.. டி20 உலகக்கோப்பையில் புதிய சர்ச்சை! இதெல்லாம் ஒரு அவுட்டா??.. அம்பயர்களின் மிக மோசமான முடிவு.. டி20 உலகக்கோப்பையில் புதிய சர்ச்சை!

தடுமாறிய வீரர்கள்

தடுமாறிய வீரர்கள்

ரோகித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆடுகளத்தில் பேட்டிற்கு பந்து நன்றாக வந்ததால், பேட்டை சுழன்று அடிக்க பேட்ஸ்மேன்களுக்கு நேரம் போதவில்லை. ஆனால் பேட் ஸ்பீடு அதிகம் இருந்த வீரர்கள் மட்டுமே இன்று ஜொலிக்க முடிந்தது. மேலும் மைதானம் பெரியதாக இருந்ததால் இன்று இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தது எல்லாம் பவுண்டரி எல்லையில் கேட்ச்சில் தான்.

சாதகம்

சாதகம்

ஆனால், இதுவே இந்திய மைதானங்களாக இருந்தால் அனைத்தும் சிக்சர் ஆகி இருக்கும். அப்போது எப்படி சூர்யகுமார் மட்டும் பட்டையை கிளப்பினார் என்று நீங்கள் யோசிக்கலாம். பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்களில் ஒரு பகுதியில் எல்லை கோடு நீளம் அதிகமாக இருந்தால், மற்றொரு பக்கம் குறைவாக இருக்கும்.

சூர்யகுமாரின் யுத்தி

சூர்யகுமாரின் யுத்தி

இதனை கருத்தில் கொண்டு சூர்யகுமார் , மைதானத்தின் அளவு குறைவாக இருக்கும் திசையை குறி வைத்து ஷாட்களை ஆடினார். ஃபுல் லெங்தில் வந்த பந்தை ஆப் ஸ்டம்ப் வெளியே சென்று பந்தை Square leg திசையில் சிக்சர் அடித்தார். இதே போன்று தில்ஸ் ஸ்கூப் போன்ற ஷாட்டை பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

சாதனை

சாதனை

இதனால், இவர் எப்படி போட்டாலும் அடிக்கிறாரே என்ற கவலையில் ஜிம்பாப்வே வீரர்கள் இருந்தனர். இதன் மூலம் 13வது அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், நடப்பாண்டில் மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை விளாசி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ஒரே ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Story first published: Sunday, November 6, 2022, 15:50 [IST]
Other articles published on Nov 6, 2022
English summary
Huge Milestone for Suryakumar yadav in t20 international cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X