Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

படகு விபத்தில் சிக்கி மறுபிறவி எடுத்தது எனது அதிர்ஷ்டம்... முச்சத நாயகன் கருண் நாயர்

சென்னை: தனது வாழ்நாளிலேயே சென்னை டெஸ்ட் போட்டி மிக சிறப்பானதாக அமைந்தது என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய ஆட்டம் மீண்டும் ஒரு அதிர்ஷ்ட நாளாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்தது அசத்தியுள்ளார்.

I am 'lucky to live again' after boat mishap in Kerala, says 303-run hero Karun Nair

கேரளாவை பூர்விகமாக கொண்ட கருண் நாயர் (26) ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் பிறந்தார். தற்போது கர்நாடாகவுக்காக விளையாடுகிறார். தமிழகம் - கர்நாடக அணிகள் மோதி ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் கருண் நாயர் 329 ரன்கள் குவித்தார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளா சென்ற கருண் நாயர், படகு விபத்தில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளாவில் பம்பா நதியில் படகில் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் நானும் சிக்கினேன். எனக்கு நீச்சல் தெரியாது. அங்கிருந்தவர்கள் தான் என்னை காப்பாற்றி கரை சேர்த்தனர். அந்த விபத்தில் மறுபிறவி எடுத்தது எனது அதிர்ஷ்டம் தான்.

எனது வாழ்நாளிலேயே சென்னை டெஸ்ட் மிக சிறப்பானதாக அமைந்தது. முதல் சதம் என்பது எல்லோருக்கும் முக்கியமானது. இதை கடந்த பிறகு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடினேன். எனது தந்தை எனது ஆட்டத்தை ரசித்து பார்த்தார். எனது வாழ்நாளில் மீண்டும் ஒரு அதிர்ஷ்ட நாளாக சென்னை டெஸ்ட் அமைந்தது என்றார்.

Story first published: Tuesday, December 20, 2016, 4:30 [IST]
Other articles published on Dec 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+