For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னைத் திட்டுவது எல்லோருக்கும் ரொம்ப ஈசியாப் போச்சு.. லியாண்டர் புலம்பல்

ரியோ டி ஜெனீரோ: எல்லோருக்கும் என்னைத் திட்டுவது சுலபமாக இருக்கிறது. அதனால்தான் நான் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார் லியாண்டர் பயஸ்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே லியாண்டர் - ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வியுற்று வெளியேறியது. இதனால் லியாண்டர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

அவருக்கும் போபண்ணாவுக்கும் இடையிலான மோதல் குறித்தும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தோல்விக்குப் பின்னர் லியாண்டர் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். அதிலிருந்து...

ஊருக்கு இளைத்தவனாகி விட்டேன்

ஊருக்கு இளைத்தவனாகி விட்டேன்

ஊருக்கு இளைத்தவனாகி விட்டேன் நான். எல்லோருக்கும் என்னைத் திட்டுவது சுலபமாகி விட்டது. அதனால்தான் நான் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறேன்.

நன்றாக திட்டிக் கொள்ளுங்கள்

நன்றாக திட்டிக் கொள்ளுங்கள்

நிறையப் பேருக்கு என்னைத் திட்டுவது பிடித்துள்ளது. தாராளமாக திட்டிக் கொள்ளட்டும். நானும் சாதாரண மனிதன்தான். எனது முயற்சிகளை நான் சிறப்பாகவே செய்கிறேன். ஆனாலும் என்னைத் திட்டுகிறார்கள்.

தொடர்ந்து விளையாடுவேன்

தொடர்ந்து விளையாடுவேன்

இதைப் பொருட்படுத்தாமல், மனதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து விளையாடுவேன். என்னைப் பற்றிய பல கதைகளுக்கு மதிப்பில்லை, அவை வேகமாக மறைந்து போய் விடும் என்பதை நான் அறிவேன்.

பட்டம் வெல்வது ஈசியல்ல

பட்டம் வெல்வது ஈசியல்ல

ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது எவ்வளவு கடினம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. 10 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வது எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. 18 பட்டங்களை வெல்வது எவ்வளவு சிரமம் என்பைத அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

7 ஒலிம்பிக்கில் பங்கேற்பது பெரிதில்லையா?

7 ஒலிம்பிக்கில் பங்கேற்பது பெரிதில்லையா?

பலருக்கு 7 ஒலிம்பிக்கில் பங்கேற்பது பெரிதாகத் தெரிவதில்லை. அது பெரிய விஷயம் இல்லையா. ஒரு வேளை மற்றவர்களைப் புரிந்து கொள்ள எனக்குத் தெரியவில்லையா என்றும் எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளால் லியாண்டர்.

Story first published: Sunday, August 7, 2016, 11:04 [IST]
Other articles published on Aug 7, 2016
English summary
An emotional Leander Paes did not hide his disappointment after losing the Rio Olympics first round men's doubles match with Rohan Bopanna stating that he has "become a soft target" and that is the reason why people are "taking potshots" at him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X