For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடருக்கு பை - பை சொன்ன அந்த அதிரடி வீரர்… கடைசியாக பேசியது இதுதான்

ஹைதராபாத்:விளையாட தடை விதிக்கப்பட்ட போது மனதளவில் உடைந்து போனேன் என்று சன் ரைசர்ஸ் வீரர் வார்னர் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 48வது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஹைதராபாத் அணியின் வார்னர் அபாரமாக ஆடினார். வார்னருக்கு இதுதான் கடைசி போட்டி. அவர் உலக கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்புகிறார். 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.

கடைசியா ஒரு காட்டு காட்டிட்டுப் போன வார்னர்! பயந்து.. பதுங்கி.. சேஸிங் செய்த அஸ்வின் அணி!! கடைசியா ஒரு காட்டு காட்டிட்டுப் போன வார்னர்! பயந்து.. பதுங்கி.. சேஸிங் செய்த அஸ்வின் அணி!!

213 ரன்கள் குவிப்பு

213 ரன்கள் குவிப்பு

வார்னர் 56 பந்துகளில் 81 ரன்களைக் குவித்தார். பீல்டிங்கில் புலியான பஞ்சாப் எவ்வளவு தடுத்தும் ஹைதராபாத் ரன்களை குவித்திருந்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கியது பஞ்சாப் அணி.

மேன் ஆப் தி மேட்ச்

மேன் ஆப் தி மேட்ச்

இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. வார்னருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது அளிக்கப்பட்டது.

பஞ்சாபுக்கு 6ம் இடம்

பஞ்சாபுக்கு 6ம் இடம்

இரு அணிகளும் இந்தப்போட்டிக்கு முன்னால் 10 புள்ளிகளுடன் இருந்தன. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகள் பெற்று 4ம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத். பஞ்சாப் 6வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

வார்னர் முதலிடம்

வார்னர் முதலிடம்

இந்த போட்டியில் அடித்த அரை சதத்துடன், இந்த தொடரில் வார்னர் அடிக்கும் 8வது அரைசதம் இது ஆகும். இந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இவர் தான் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் இருக்கும் ரசலை விட இவர் 250 ரன்கள் அதிகமாக அடித்துள்ளார்.

பாதிப்பு

பாதிப்பு

போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டேவிட் வார்னர் கூறியதாவது: தடை செய்யப்பட்ட போது மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். எனது குடும்பத்தினர் குறிப்பாக மனைவி மற்றும் மகள்கள் என்னை மீட்டெடுத்தார்கள்.

நினைக்கவில்லை

நினைக்கவில்லை

அதன்பிறகு அவர்களுடன் அதிக நேரம் செலவழித்து என்னை தைரியம் படுத்திக் கொண்டேன். இந்த ஆண்டு சீசனின் துவக்கத்தில் நான் இப்படி ஆடுவேன் என நினைத்து பார்க்கவில்லை.

பக்கபலமாக இருந்தார்

பக்கபலமாக இருந்தார்

எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முயன்றேன். அதன் பலனாகவே இவ்வளவு ரன்களை குவிக்க முடிந்தது. எனக்கு பக்கபலமாக ஜானி பெயர்ஸ்டோவ் இருந்தார்.

அனைவருக்கும் வாழ்த்துகள்

சில நேரங்களில் என் தவறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். உலக கோப்பை அணியில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எனது பங்களிப்பை நிச்சயம் தர முயற்சிப்பேன். வரும் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறி விடைபெற்றார்.

Story first published: Tuesday, April 30, 2019, 11:08 [IST]
Other articles published on Apr 30, 2019
English summary
I have worked hard over the last few months says sun risers hydrabad player david warner.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X