For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிகிட்ட கத்துக்கிட்டத அவருக்கு எதிராவே திருப்பப் போறேன்... வெளிப்படையா சொல்லியிருக்காரு பந்த்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் அறிவிக்கப்பட்டுள்ளார் ரிஷப் பந்த்.

வரும் 10ம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிஎஸ்கேவுடன் மோதவுள்ளது.

 குழப்பத்தில் விராட் கோலி.தேவ்தத் பட்டிக்கலின் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள்.பலம் என்ன? குழப்பத்தில் விராட் கோலி.தேவ்தத் பட்டிக்கலின் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள்.பலம் என்ன?

இந்நிலையில் தன்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் தோனியிடம் தான் பெற்ற படிப்பினைகளை சிஎஸ்கே அணிக்கு எதிராக பயன்படுத்தவுள்ளதாக பந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பந்த்

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பந்த்

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டின் ரன்னர் அப் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியை இந்த சீசனில் கேப்டனாக வழிநடத்தவுள்ளார் ரிஷப் பந்த்.

ரிஷப் மகிழ்ச்சி

ரிஷப் மகிழ்ச்சி

காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் ரிஷப் பந்த். இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியிடம் தான் அதிகமாக கற்றுள்ளதாகவும் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் அவருக்கு எதிராக மோதவுள்ளது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தோனியிடம் பெற்ற படிப்பினைகள்

டெல்லி கேபிடல்சின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர் இந்த தொடரில் தன்னுடைய சொந்த அனுபவம் மற்றும் தோனியிடம் இருந்து தான் பெற்ற படிப்பினைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பை வெல்ல தீவிரம்

கோப்பை வெல்ல தீவிரம்

தன்னை கேப்டனாக தேர்ந்தெடுத்த பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பந்த், இதுவரை டெல்லி கேபிடல்ஸ் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த சீசனில் கோப்பையை வெற்றி கொள்ள தான் தீவிர முயற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் அணி சிறப்பாக முன்னேறியுள்ளதாகவும் ரிஷப் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, April 6, 2021, 18:01 [IST]
Other articles published on Apr 6, 2021
English summary
We've been Playing nicely as a team from last two-three years -Pant
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X