For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கிரிக்கெட்டா ஆடுகிறீங்க.. பவுலர்கள் வேண்டாம்.. இயந்திரமே போதும்" இங்கி. அணியால் அஸ்வின் ஆதங்கம்!

சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பார்த்து மனம் வருந்தியதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. அந்த ஆட்டத்தின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி 506 ரன்கள் குவித்த விவகாரம், தொடர்ந்து பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து அணி ஒரே நாளில் 75 ஓவர்களில் 506 ரன்கள் குவித்ததற்கு ராவல்பிண்டி மைதானத்தின் பிட்ச் தார் சாலை போல் இருந்ததே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

வேற இடமே கிடைக்கலையாங்க??.. பாகிஸ்தான் டெஸ்டில் ஜோ ரூட் செய்த அதிபுத்திசாலித்தன விஷயம்.. சிரிப்பலை!! வேற இடமே கிடைக்கலையாங்க??.. பாகிஸ்தான் டெஸ்டில் ஜோ ரூட் செய்த அதிபுத்திசாலித்தன விஷயம்.. சிரிப்பலை!!

அஸ்வின் விளாசல்

அஸ்வின் விளாசல்

ராவல்பிண்டி பிட்ச் குறித்து அஸ்வின் பேசுகையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து ஆட்டத்தை பார்த்த போது, பந்துவீச்சாளராக நினைத்து பார்த்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசும் போது, ஸ்விங்கும் இல்லாமல் சீமும் இல்லாமல் இருக்கிறது. இங்கிலாந்து அணி டெக்கெட் அனைத்து திசைகளிலும் பவுண்டர்கள் விளாசுகிறார்.

யார் திட்டமிட்டது?

யார் திட்டமிட்டது?

இங்கிலாந்து அணியின் அணுகுமுறையை பேஸ்பால் என்று சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் எப்படி ஒரு பேட்ஸ்மேனால் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடிக்க முடியும். ஒரு நல்ல டெஸ்ட் பிட்ச் என்றால், முதல் 2 நாட்கள் பேட்டிங்கிற்கும், பின்னர் பவுலிங்கிற்கும், பின்னர் ஸ்பின்னருக்கான சுழல் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இதனை திட்டமிட்டது யார் என்று தெரியவில்லை.

பவுலிங் இயந்திரம் தான் தேவை

பவுலிங் இயந்திரம் தான் தேவை

இங்கிலாந்து அணி ஒரு நாளில் 500 ரன்கள் விளாசினாலும், என்னால் அந்த ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. அந்த ஆட்டத்தை பார்க்கும் போது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசுவதற்கு முன்னதாக எதிர்திசையில் திரும்பி ஹிட் செய்வது என்ன கணக்கு என்றே புரியவில்லை. வரும் காலங்களில் ஸ்விச் ஹிட் பற்றி விமர்சனங்கள் அதிகமாக வரும். இன்னும் சில நாட்களில் பவுலிங் இயந்திரத்துடன் தான் பந்துவீச்சாளர்கள் மைதானத்திற்கு செல்ல வேண்டும்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்தது. இதனை பார்த்த பின், ஒரு பந்துவீச்சாளருக்கு சாப்பாடு வயிற்றில் இறங்கவே இறங்காது. பிட்ச்சில் எதுவும் செய்ய முடியாதென்றால் பவுலிங் இயந்திரத்தை வைத்து பந்துவீசலாமே. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நசீம் ஷா பந்துவீசி வலியே ஏற்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் பந்துவீச்சாளருக்கு ஒரு பங்கு இருந்தது. இதனை பார்க்கும் போது இன்னும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 5, 2022, 0:44 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
Indian cricketer Ashwin said that he was saddened by the performance of the England batsmen in the Test match against the Pakistan team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X