For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பவுலிங்கில் என்னியவே மிரட்னவர் இவர்..! சீக்ரெட்டை சொல்லி ஓய்வுக்கு வாழ்த்திய ஜாம்பவான் சச்சின்..!

டெல்லி: கிரிக்கெட் வாழ்க்கையில் சவாலாக திகழ்ந்த பவுலர்களில் ஒருவர் டேல் ஸ்டெயின் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் திடீரென டெஸ்ட் போட்டி களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டார் பவுலரான டேல் ஸ்டெயின், காயத்தால் உலக கோப்பை தொடரில் பாதியிலே வெளியேறினார். தற்போது அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்களை சாய்த்துள்ளார். 26 முறை 5 விக்கெட்கள், 5 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் தரவரிசையலில் தொடர்ந்து 263 வாரங்கள், 2008 முதல் 2014 வரை முதலிடத்தில் இருந்துள்ளார்.

எங்கல்யாணத்துக்கு கண்டிப்பா அவிய்ங்க வருவாய்ங்க..!! டீம் இந்தியாவுக்காக வெயிட் பண்ணும் பாக். வீரர் எங்கல்யாணத்துக்கு கண்டிப்பா அவிய்ங்க வருவாய்ங்க..!! டீம் இந்தியாவுக்காக வெயிட் பண்ணும் பாக். வீரர்

பலர் வாழ்த்து

பலர் வாழ்த்து

அவரது ஓய்வு குறித்து அறிந்து முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கேப்டன் கோலி கூட அவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் வாழ்த்தி உள்ளார். இந் நிலையில் ஜாம்பவான் சச்சின், ஸ்டெயினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சவாலான பவுலர்

தமது கிரிக்கெட் பயணத்தில் சவாலாக அமைந்த பவுலர்களில் ஸ்டெயினும் ஒருவர் என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: பொதுவாக பவுலிங்கில் அவுட் சுவிங் என்பது சாதாரண ஒன்று கிடையாது. ஆனால், அதை சர்வ சாதாரணமாக பவுலிங் செய்யக்கூடியவர் ஸ்டெயின்.

மாற்று ஆண்டர்சன்

மாற்று ஆண்டர்சன்

அவருக்கு இணையாக பவுலிங் பண்ணக்கூடிய ஒரே நபர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டும் தான். குறிப்பாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் ஸ்டைன் சுவிங் செய்வதால் அவரின் அசுர வேகத்தை எளிதாக சமாளிக்க முடியாது.

த்ரில்லான அனுபவம்

த்ரில்லான அனுபவம்

குறிப்பாக தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனில் நடந்த டெஸ்டில் நான் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்டெயினின் அசுர வேகத்தை சமாளித்தேன். அது மிகவும் த்ரில்லான அனுபவம். ஸ்டெயினுக்கு எதிரான சவாலை மிகவும் ரசித்தேன். அவரின் சிறப்பான பயணத்துக்கு வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Tuesday, August 6, 2019, 18:27 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
I wondered his bowling Sachin says about dale steyn who announced retirement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X