For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது” ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

சிட்னி: டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியாயமாக நடந்துக்கொண்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதே இருக்கும் என அந்நாட்டு முன்னாள் வீரர் இயான் ஹீலி கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இந்த முறையும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன.

இந்த தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்கி மார்ச் 13ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் முடிவடையவுள்ளது. கவுரவ பிரச்சினையுடன் சேர்த்து ஐசிசி கோப்பையும் இந்த தொடரில் அடங்கியுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை

இந்த தொடரில் தான் இந்தியா நியாயமில்லாமல் நடந்துக்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த முறை வந்த போதே, இந்திய பிட்ச்-களில் மிக அதிகமான ஸ்பின் இருந்தது. இதனால் கொஞ்சம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட்டாகினர். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து டி20 தொடரிலும் ஏகபோகத்திற்கு ஸ்பின் ஆனதால் பிட்ச்- குறித்த விமர்சனங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

நியாயமே இல்லை

நியாயமே இல்லை

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். அவர், "இந்தியாவில் நியாயமான முறையில் பிட்ச்-களை கொடுத்தால் நன்றாக இருக்கும். அதாவது பேட்ஸ்மேன்களுக்கு நன்கு உதவக்கூடியதாகவும், ஒரே மாதிரியான ஸ்பின் இருக்கும் வகையிலும் கொடுக்க வேண்டும். ஆட்டத்தின் கடைசி நாட்களில் நல்ல டேர்ன் இருந்தால் ஆஸ்திரேலியா நிச்சயம் வெல்லும்.

கடந்த முறை சிக்கல்

கடந்த முறை சிக்கல்

கடந்த தொடரில் பந்துகள் ஏகபோகத்திற்கு திரும்புவது, எங்கு செல்கிறதே என்று தெரியாத அளவிற்கு பவுன்ஸ் ஆவது, ஆட்டத்தின் முதல் நாளிலேயே பிட்ச் ஸ்லோவாகிவிடுவது போன்ற பிட்ச் தான் தந்தனர். அதே போல இந்த முறையும் செய்தால் நிச்சயம் இந்தியா தான் சிறப்பாக செயல்படும். ஆனால் அது நியாயம் கிடையாது.

பேட்டிங் ஐடியா

பேட்டிங் ஐடியா

இந்திய பவுலர்களிடம் ஆஸி, பேட்டர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போதைக்கு தப்பித்தோம் என்ற எண்ணத்தில் மிக மெதுவாக ஆடி வந்தால், அது சிக்கலாக தான் மாறும். எனவே உங்களின் பேட்டிங் ப்ளானை முதலில் இருந்தே வெளிக்காட்டுங்கள். இதே போல ஃபீல்டிங்கிலும் கவனமாக இருங்கள். இந்தியாவில் கேட்ச் பிடிப்பது கடினம். அதை சரியாக செய்யுங்கள் என இயான் ஹீலி கூறியுள்ளார்.

Story first published: Friday, February 3, 2023, 10:07 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Former Australian Cricketer Ian healy feels "If India produce fair wickets, australia will win" in Border gavaskar trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X